செய்திகள் :

மூக்குத்தி அம்மன் 2: முதல்பார்வை போஸ்டர்!

post image

நடிகை நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்தப் போஸ்டரை பகிர்ந்த நடிகை நயன்தாரா, ரசிகர்களுக்கு தனது ஆயுத பூஜை வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

முக்குத்தி அம்மன் முதல் பாகத்தில் நடிகை நயன்தாரா அம்மன் வேடத்திலும் ஆர்ஜே பாலாஜி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர்.

இந்தப் படம் வெளியானபோது நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்க, இரண்டாம் பாகத்தினை சுந்தர் சி இயக்குகிறார்.

இப்பாகத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் உடன் விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றன.

இந்தப் படத்தில் நடிகைகள் நயன்தாரா, துனியா விஜய், ரெஜினா கேசண்ட்ரா, யோகிபாபு, ஊர்வசி, அபிநயா, ராமச்சந்திர ராஜு, அஜய் கோஷ், சிங்கம்புலி, விச்சு விஸ்வநாத், இனியா, மைனா நந்தினி ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் பூஜை ரூ. 1 கோடி செலவில் நடைபெற்றதாகவும் படம் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் பான் இந்திய படமாகவும் உருவாகவுள்ளதையும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்திருந்தார்.

The first look poster of actress Nayanthara's Mookuthi Amman 2 has been released.

இந்திய துரோகியா? பக்தனா? வெளியானது மம்மூட்டி - மோகன்லால் பட டீசர்!

நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால் இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால், ஃபஹத் ஃபாசில், குஞ்சக்கோ போபன், நயன்தாரா, ரேவதி உள்ளிட்டோர் இயக்குநர் மகேஷ் நாராயண... மேலும் பார்க்க

இட்லி கடை முதல் நாள் வசூல் எவ்வளவு?

நடிகர் தனுஷின் இட்லி கடை திரைப்படம் வரவேற்பைப் பெற்று வருகிறது.நடிகர் தனுஷ் இயக்கி, நடித்த திரைப்படமான இட்லி கடை நேற்று (அக்.1) திரையரங்குகளில் வெளியானது. இதில் நாயகியாக நித்யா மெனனும் வில்லனாக அருண் ... மேலும் பார்க்க

நெருப்பில் குளிக்கும் தெய்வம்... காந்தாரா சாப்டர் - 1 திரை விமர்சனம்!

நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த காந்தாரா சாப்டர் - 1 இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.காந்தாராவில் ரிஷப் ஷெட்டியின் கதாபாத்திரம் இறுதியாக ஓரிடத்தில் சுற்றியபடி காணாமல் போகும். அந்த இடத்திலிருந... மேலும் பார்க்க

முகத்தில் கரும்புள்ளிகள் பிரச்னையா? சரிசெய்ய இயற்கையான வழி இதோ!

முகத்தில் கரும்புள்ளிகள் முக அழகைக் கெடுக்கும் வகையில் மோசமாக இருக்கும். இதனைச் சரிசெய்ய பலவகையான க்ரீம்கள் வந்துவிட்டன. ரசாயனம் நிறைந்த க்ரீம்களால் சிலருக்கு கரும்புள்ளிகள் பிரச்னை மேலும் அதிகரித்து ... மேலும் பார்க்க