பாகிஸ்தானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு: 12 பேர் பலி
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அரசுக்கு எதிரான போராட்டத்தின்போது நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 12 பேர் பலியாகினர்.
பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதாக கூறி கூட்டு அவாமி நடவடிக்கைக் குழு தலைமையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் சந்தைகள், கடைகள் மற்றும் உள்ளூர் வணிகங்கள் முழுமையாக மூடப்பட்டன.
திருடப்பட்ட 6 லட்சம் கைப்பேசிகள் மீட்பு; லட்சக்கணக்கான குடும்பங்களின் டிஜிட்டல் பாதுகாப்பும் மீட்டெடுப்பு!
போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டன. இந்த நிலையில் போராட்டத்தைக் கட்டுப்படுத்த பாகிஸ்தான் ராணுவம் ஒருசில இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த சம்பவத்தில் பொதுமக்கள் 12 பேர் பலியாகினர். திர்கோட்டில் 4, முஸாஃபராபாத்தில் 2, மிர்பூரில் 2 பேர் என பலியாகினர்.
அதே நேரத்தில் 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் மோதல்களில் மூன்று போலீஸார் பலியானதோடு 9 பேரும் காயமடைந்துள்ளனர். முஸாஃபராபாத் இறப்புகளுக்கு பாகிஸ்தான் ரேஞ்சர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திதே காரணம் என்று அவாமி குழு குற்றம்சாட்டியுள்ளது என வட்டாரங்கள் தெரிவித்தன.