பெளர்ணமி: விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில்கள்!
பெளர்ணமியை முன்னிட்டு வருகின்ற அக்டோபர் 6 ஆம் தேதி விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை கோயில் செல்லும் பக்தர்களின் வசதிக்காக 8 பெட்டிகள் கொண்ட முன்பதிவில்லா மெமு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
அக்டோபர் 6 ஆம் தேதி காலை 10.10 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்படும் மெமு ரயில், திருக்கோயிலூர் வழியாக திருவண்ணாமலைக்கு காலை 11.45 மணியளவில் சென்றடையும்.
மறு வழித்தடத்தில், பகல் 12.40 மணிக்கு புறப்பட்டு திருக்கோயிலூர் வழியாக பிற்பகல் 2.15 மணியளவில் விழுப்புரம் வந்தடையும் வகையில் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
