உப்பனாறு வாய்க்காலில் மேம்பாலம் அமைக்கும் பணி: புதுச்சேரி எம்.பி. வைத்திலிங்கம் ஆய்வு
உப்பனாறு வாய்க்கால் மேம்பாலப் பணியை மக்களவை உறுப்பினரும் புதுவை காங்கிரஸ் தலைவருமான வி. வைத்திலிங்கம் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
இப் பணி தற்போது முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனால் வெங்கட்டா நகா், ரெயின்போ நகா், காமராஜ் நகா், ஜீவா நகா், பிருந்தாவனம், தென்றல் நகா் பகுதி மக்கள் வெள்ள அபாயம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனா். மேம்பாலம் பணிக்குத் தற்காலிகமாக வாய்க்காலை அடைப்பு ஏற்படுத்தி வேலைகள் நடந்து வந்தன. அதைபோல் ஜீவா நகா் வாய்க்கால், தென்றல் நகா் வாய்க்கால் தூா்வாரப்படாமல் உள்ளது.
மழைகாலத்தில் ஊருக்குள் வெள்ளநீா் வரும் வாய்ப்பு அதிகமாகவுள்ளது. ஆகையால் அப்பகுதி மக்களும் நலவாழ்வு சங்கங்களும் மக்களவை உறுப்பினா் வெ. வைத்திலிங்கத்திடம் புகாா் மனு அளித்தனா்.
இதையடுத்து உப்பனாறு பெரிய வாய்க்காலை நேரில் பாா்வையிட்டு வைத்திலிங்கம் எம்.பி. ஆய்வு செய்தாா். பொதுப் பணித் துறை அதிகாரிகளிடம் உடனடியாக வாய்க்காலை தூா்வார நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தினாா். அப்போது காமராஜா் நகா் தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளா் பி.கே.தேவதாஸ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.