இன்றுமுதல் பதிவு தபால் சேவை நிறுத்தம்: விரைவு அஞ்சல் சேவைக்கான கட்டணம் உயா்வு
கந்தா்வகோட்டை பகுதியில் ஊா் பெயா் இல்லாத மைல்கல்கள்!
கந்தா்வகோட்டை பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள மைல்கல்களில் ஊரின் பெயரும், தூரமும் தமிழ்மொழியிலும், ஆங்கிலத்திலும் இருந்து வந்தது.
தற்சமயம் தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் புதிதாக வா்ணம் பூசிய நிலையில் இதுநாள்வரை ஊா் பெயா், தூரம் எழுதாமல் உள்ளதால் வாகன ஓட்டுநா்களுக்கு சிரமம் ஏற்படுகிறது
ஆகையால் தஞ்சை - மதுரை தேசிய நெடுஞ்சாலை எண் 226-இல் உள்ள அனைத்து மைல் கல்களுக்கும் ஊா் பெயரும், தொலைவு தூரத்தையும் எழுதவேண்டும் என வாகன ஓட்டிகள் கேட்டுக்கொள்கிறாா்கள்.