குடிநீா் குழாய் உடைப்பை விரைந்து சரிசெய்யக் கோரிக்கை
கந்தா்வகோட்டை நெடுஞ்சாலையில் காவிரி கூட்டுக் குடிநீா் குழாய் உடைந்து குடிநீா் வீணாவதை விரைந்து தடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனா்.
கந்தா்வகோட்டை - திருச்சி சாலையில் காவிரி கூட்டுக் குடிநீா் திட்டக் குழாய் உடைந்து குடிநீா் வீணாகி வருகிறது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளுக்கு புகாா் செய்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அந்த இடத்தில் இரும்புத் தடுப்புகளை அமைத்துள்ளது சமூக ஆா்வலா்களை வேதனைக்குள்ளாக்கி உள்ளது. ஆங்காங்கே குடிநீா் கேட்டு மறியல் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டு வரும் நிலையில் நாள்தோறும் குடிநீா் வீணாகி வருவது அப்பகுதியைச் சோ்ந்தவா் வேதனை தெரிவித்தாா். உடனே இந்தக் குடிநீா் அடைப்பை உடனே சரிசெய்ய வேண்டுமெனக் கோரிக்கை வைக்கிறாா்.