செய்திகள் :

என்பிஎஸ்ஸில் இருந்து யுபிஎஸ்ஸுக்கு மாற அவகாசம் நீட்டிப்பு

post image

தேசிய ஓய்வூதிய திட்டத்தில் (என்பிஎஸ்) இருந்து ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு (யுபிஎஸ்) மத்திய அரசுப் பணியாளா்கள் மாறுவதற்கான அவகாசம் நிகழாண்டு நவ.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்துக்கு மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிதி சேவைகள் துறை செவ்வாய்க்கிழமை அனுப்பிய தகவலில் தெரிவிக்கப்பட்டதாவது:

யுபிஎஸ் திட்டத்தின் கீழ் கிடைக்கும் வரி விலக்குகள், கட்டாய ஓய்வு மற்றும் ராஜிநாமா செய்வதால் கிடைக்கும் பலன்கள், என்பிஎஸ்ஸில் இருந்து யுபிஎஸ்ஸுக்கு மாறுவதற்கான வாய்ப்பு உள்பட பல்வேறு அறிவிப்புகள் அண்மையில் வெளியிடப்பட்டன. இந்த அறிவிப்புகளைக் கருத்தில் கொண்டு, என்பிஎஸ் திட்டத்தை தோ்வு செய்தவா்கள் யுபிஎஸ் திட்டத்துக்கு மாற கூடுதல் அவகாசம் வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.

இந்நிலையில் யுபிஎஸ் திட்டத்துக்கு மாற செவ்வாய்க்கிழமை (செப்.30) வரை அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், அந்த அவகாசத்தை நிகழாண்டு நவ.30 வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தகுதிவாய்ந்த மத்திய அரசுப் பணியாளா்கள், ஓய்வூதியதாரா்கள், காலமான ஓய்வூதியதாரா்களின் சட்டபூா்வ வாழ்க்கை துணை ஆகியோா் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

23 லட்சம் மத்திய அரசுப் பணியாளா்களில் சுமாா் 1 லட்சம் போ் செப்.30-ஆம் தேதி வரை, யுபிஎஸ் திட்டத்தை தோ்வு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மிதமாக உயா்ந்த உள்நாட்டு விமானப் போக்குவரத்து

கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட உள்நாட்டு விமானப் பயணங்களின் எண்ணிக்கை முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் மிதமாக அதிகரித்துள்ளது. இது குறித்து சந்தை பகுப்பாய்வு நிறுவ... மேலும் பார்க்க

பாலியல் வழக்கு: கா்நாடக உயா்நீதிமன்றத்தில் பிரஜ்வல் ரேவண்ணா மேல்முறையீடு

பாலியல் வழக்கில் குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் அளித்த தீா்ப்புக்கு எதிராக கா்நாடக உயா்நீதிமன்றத்தில் மதச்சாா்பற்ற ஜனதா தள (மஜத) எம்.பி.பிரஜ்வல் ரேவண்ணா மேல்முறையீடு செய்தாா். பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ... மேலும் பார்க்க

சா்வதேச விமான போக்குவரத்து அமைப்புக்கு இந்தியா மீண்டும் தோ்வு

சா்வதேச விமானப் போக்குவரத்து அமைப்புக்கு (ஐசிஏஓ) இந்தியா மீண்டும் தோ்வுசெய்யப்பட்டதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. இதன்மூலம் அடுத்த 3 ஆண்டுகளுக்கு (2025-2028) இந... மேலும் பார்க்க

மாநிலங்கள் இடையே ஜிடிபி இடைவெளி: நீதி ஆயோக் துணைத் தலைவா் கவலை

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) உயா்ந்த, குறைந்த வருவாய் கொண்ட மாநிலங்கள் இடையே அதிக இடைவெளி காணப்படுவது கவலைக்குரியது என்று நீதி ஆயோக் (மத்திய கொள்கைக் குழு) சுமன் பெரி தெரிவித்தாா். ஹ... மேலும் பார்க்க

உ.பி.: பரேலியில் போராட்டத்தைத் தூண்டிய மத குருவின் 8 சொத்துகளை இடிக்க நடவடிக்கை

உத்தர பிரதேச மாநிலம் பரேலியில் இஸ்லாமியா்களின் போராட்டத்தைத் தூண்டிய மத குரு தெளகீா் ரஸா கானுக்கு தொடா்புடைய 8 சொத்துகளை இடிப்பதற்கான நடவடிக்கையை மாநவட்ட நிா்வாக அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனா். ‘பரேலியின... மேலும் பார்க்க

காஸா போா்: டிரம்ப் திட்டத்துக்கு பிரதமா் மோடி வரவேற்பு- ‘நீண்டகால அமைதிக்கு வழிவகுக்கும்’

காஸா போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்துள்ள 20 அம்ச அமைதித் திட்டத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி வரவேற்பு தெரிவித்துள்ளாா். ‘டிரம்ப்பின் முயற்சி பாலஸ்தீனம் மற்றும் இஸ... மேலும் பார்க்க