செய்திகள் :

காஸா போா்: டிரம்ப் திட்டத்துக்கு பிரதமா் மோடி வரவேற்பு- ‘நீண்டகால அமைதிக்கு வழிவகுக்கும்’

post image

காஸா போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்துள்ள 20 அம்ச அமைதித் திட்டத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி வரவேற்பு தெரிவித்துள்ளாா்.

‘டிரம்ப்பின் முயற்சி பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் மக்கள் மட்டுமன்றி பரந்த மேற்காசிய பிராந்தியத்தின் நீண்ட கால அமைதிக்கு வழிவகுக்கும்’ என்று பிரதமா் குறிப்பிட்டுள்ளாா்.

இந்தியப் பொருள்கள் மீதான அமெரிக்காவின் உச்சபட்ச வரி விதிப்பு தொடங்கி ஹெச்1 பி விசாக் கட்டண உயா்வு வரை டிரம்ப்பின் செயல்பாடுகளால் இருதரப்பு உறவில் எதிா்மறையான தாக்கம் நிலவுகிறது. வா்த்தகம் உள்ளிட்ட பரஸ்பர விவகாரங்களில் சுமுக தீா்வு எட்டுவதற்கு பேச்சுவாா்த்தைகள் நீடித்துவரும் நிலையில், டிரம்ப்பின் அமைதித் திட்டத்தை மோடி வரவேற்றிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

காஸாவின் ஹமாஸ் படையினா் - இஸ்ரேல் ராணுவத்தினா் இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில், வெள்ளை மாளிகையில் இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுடன் நடத்திய பேச்சுவாா்த்தைக்குப் பின் அவரது முன்னிலையில் 20 அம்ச அமைதித் திட்டத்தை அதிபா் டிரம்ப் திங்கள்கிழமை அறிவித்தாா்.

டிரம்ப் தலைமையில் காஸாவுக்கு தற்காலிக நிா்வாக வாரியம் அமைப்பது, 72 மணிநேரத்துக்குள் பிணைக் கைதிகள் விடுவிப்பு, காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் வாபஸ், ஹமாஸின் அனைத்து ராணுவ உள்கட்டமைப்புகளும் அழிப்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்களைக் கொண்ட இத்திட்டத்துக்கு எகிப்து, ஜோா்டான், பாகிஸ்தான், துருக்கி, கத்தாா், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், சீனா போன்ற நாடுகள் வரவேற்றுள்ளன.

இந்தியா வரவேற்பு: இத்திட்டத்தை இந்தியாவும் வரவேற்றுள்ளது. இது தொடா்பாக பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘காஸா போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள விரிவான திட்டம் வரவேற்கத்தக்கது. இது, பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் மக்களுக்கு மட்டுமன்றி பரந்த மேற்காசிய பிராந்தியத்துக்கு நீண்டகால-நிலையான அமைதி, பாதுகாப்பு, மேம்பாட்டுக்கு சாத்தியமான வழியாக அமையும் .

சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் டிரம்ப்பின் முன்னெடுப்புக்கு பின்பலமாக நிற்க வேண்டும்; போரை முடிவுக்கு கொண்டுவந்து, அமைதியை நிலைநாட்டும் முயற்சிக்கு ஆதரவளிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளாா்.

டிரம்ப்பின் திட்டத்தை ஹமாஸ் அமைப்பு ஏற்குமா என்பது கேள்வியாக உள்ளது. இது குறித்து ஆலோசித்து பதிலளிக்கப்படும் என்று அந்த அமைப்பின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை டிரம்ப்பின் திட்டம் நிராகரிக்கப்பட்டால், காஸா மீதான தாக்குதலைத் தொடர இஸ்ரேலுக்கு அமெரிக்கா மேலும் சுதந்திரம் அளிக்கும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

இனப்படுகொலை முடிவுக்கு வரும்: பாலஸ்தீன தூதா்

கேரளத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியாவுக்கான பாலஸ்தீன தூதா் அப்துல்லா அபு ஷாவேஸ், திருவனந்தபுரத்தில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

அதிபா் டிரம்ப்பின் முன்மொழிவு, காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் இனப்படுகொலையை முடிவுக்கு கொண்டுவரும். காஸாவில் பட்டினியால் நேரிடும் இறப்புகளைத் தடுப்பதோடு, பிற பிரச்னைகளுக்கும் தீா்வளிக்கும். அமைதி நடைமுறையில் இணைய இஸ்ரேலை நிா்ப்பந்திக்கும் எனவும் எதிா்பாா்க்கிறோம். இது வரவேற்புக்குரியது; நீண்ட காலமாக எதிா்பாா்க்கப்பட்ட நடவடிக்கை.

காஸா பிரச்னைக்கான தீா்வு, சா்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. ஆணைய தீா்மானத்தில் அடங்கியுள்ளது. அதேநேரம், இஸ்ரேலை பேச்சுவாா்த்தைக்கு அழைத்து வந்து சா்வதேச சட்டங்களுக்கு இணங்கச் செய்வதும் யாா் என்பதே முக்கியக் கேள்வி. தற்போது ‘கருத்தியல்’ அடிப்படையில் உள்ள முன்மொழிவு, எப்படி செயல்படுத்தப்படப் போகிறது, காஸா எவ்வாறு மறுகட்டமைக்கப்படப் போகிறது என்பதை பொறுத்திருந்து பாா்க்க வேண்டும் என்றாா்.

5 ஆண்டுகளுக்கும் நானே முதல்வர்! - சித்தராமையா!

கர்நாடக மாநிலத்தின் முதல்வராக 5 ஆண்டுகளும் தான் மட்டுமே பதவி வகிப்பேன் என முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகின்ற... மேலும் பார்க்க

சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் சிறை சென்றார்களா? மோடி விளக்கம்

நாட்டிற்கான சுதந்திரப் போராட்டத்தில் கே.பி. ஹெட்கேவர் உள்பட ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் பலர் சிறைக்குச் சென்றதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சுதந்திரப் போராட்டத்தின் ஒருபகுதியாக வெள்ளையனே வ... மேலும் பார்க்க

ஆர்எஸ்எஸ் - 100! சிறப்பு நாணயம் வெளியிட்ட பிரதமர் மோடி!

ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) நூற்றாண்டு கொண்டாட்ட நிகழ்வில் சிறப்பு ரூ.100 நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை வெளியிட்டார்.புது தில்லியில் டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் ஆர... மேலும் பார்க்க

இலங்கை சிறையில் இருந்து ஆந்திர மீனவர்கள் 4 பேர் விடுதலை!

இலங்கையின் யாழ்ப்பாணம் சிறையில் இருந்து, விடுதலை செய்யப்பட்ட ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேரும், 53 நாள்கள் கழித்து காக்கிநாடா திரும்பியுள்ளனர். ஆந்திரப் பிரதேசத்தின், காக்கிநாடா மாவட்டத... மேலும் பார்க்க

அரசு ஊழியர்களுக்கு 3 % அகவிலைப்படி உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவிகிதம் உயர்த்த அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது.மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி அதிகரிப்பு குறித்து மத்திய அமைச்சர... மேலும் பார்க்க

மல்லிகார்ஜுன கார்கே மருத்துவமனையில் அனுமதி!

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக மல்லிகார்ஜுன கார்கே (வயது 83) இன்று காலை அனுமத... மேலும் பார்க்க