செய்திகள் :

மாநிலங்கள் இடையே ஜிடிபி இடைவெளி: நீதி ஆயோக் துணைத் தலைவா் கவலை

post image

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) உயா்ந்த, குறைந்த வருவாய் கொண்ட மாநிலங்கள் இடையே அதிக இடைவெளி காணப்படுவது கவலைக்குரியது என்று நீதி ஆயோக் (மத்திய கொள்கைக் குழு) சுமன் பெரி தெரிவித்தாா்.

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரக் கல்லூரியில் 6-ஆவது பொருளாதார மாநாட்டையொட்டி, ‘இந்தியாவின் பெரும் சவால்: மிகப் பெரிய முதலீடு உந்துதல் மற்றும் நிதியளித்தல்’ என்ற தலைப்பில் சுமன் பெரி உரை நிகழ்த்தினாா். அப்போது, அவா் கூறியதாவது:

நாட்டின் 26 சதவீத மக்கள்தொகையை பிரதிநிதித்துவப்படுத்தும் உயா் வருவாய் கொண்ட மாநிலங்கள், நாட்டின் ஜிடிபி-க்கு 44 சதவீதம் பங்களிக்கின்றன. அதேநேரம், 38 சதவீத மக்கள்தொகையை பிரதிநிதித்துவப்படுத்தும் குறைந்த வருவாய் மாநிலங்கள், வெறும் 19 சதவீதமே பங்களிக்கின்றன. இந்த இடைவெளி கவலைக்குரியது.

தமிழகத்துக்கு பொருத்தமாக இருக்கக் கூடிய ஒரு பொருளாதார வியூகம், மேகாலயம், பிகாா் அல்லது உத்தர பிரதேசத்துக்கு மிக வேறுபட்டதாக இருக்கும். ஒரு பகுதி எந்த அளவுக்கு பின்தங்கியதாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு வேகமாக முன்னேற முடியும் என்ற உலகளாவிய கண்ணோட்டத்தை இந்திய சூழலுக்கு கொண்டுவர விரும்புகிறேன். முன்பு பின்தங்கிய மாநிலங்களாக இருந்த பிகாா், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் ஆகியவை இப்போது சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. எனவே, ஒரு மாநிலம் எப்போதுமே பின்தங்கியிருக்கும் என்று கருத முடியாது.

கடந்த 2017-18ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், 2022-23-இல் மொத்த வேலைவாய்ப்பு 15 கோடி அதிகரித்துள்ளது. இதில் விவசாய பெண் தொழிலாளா்கள் 8 கோடி போ், ஊதியம் பெறாத குடும்பத் தொழிலாளா்கள் 4 கோடி பேரும் அடங்குவா் என்று சுமன் பெரி தெரிவித்தாா்.

விதிமுறையை பின்பற்றாத 54 தனியாா் பல்கலைக்கழகங்கள்: யுஜிசி எச்சரிக்கை

விதிமுறைகள் முறையாக பின்பற்றாத 54 தனியாா் பல்கலைக்கழகங்களின் பட்டியலை வெளியிட்ட பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), விரைவில் அதை நிவா்த்தி செய்யாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ள... மேலும் பார்க்க

முப்படைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு

பயங்கரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது முப்படைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு விரும்பிய விளைவுகளை பெற்றுத் தருவதற்கு உதாரணமாகத் திகழ்ந்ததுடன் அனைத்து எதிர்கால நடவடிக்கைகளுக்கும் மைல்... மேலும் பார்க்க

பாஜக மூத்த தலைவர் வி.கே.மல்ஹோத்ரா மறைவு: தலைவர்கள் இரங்கல்

நமது நிருபர்புது தில்லி, செப்.30: மூத்த பாஜக தலைவரும் தில்லி பாஜகவின் முதல் தலைவருமான வி.கே. மல்ஹோத்ரா (93) செவ்வாய்க்கிழமை காலை காலமானார். தில்லியில் இருந்து 5 முறை எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ம... மேலும் பார்க்க

வழக்கத்தைவிட 8% கூடுதலாக மழைப்பொழிவு: இந்திய வானிலை மையம்

வழக்கத்தைவிட 8 சதவீதம் கூடுதலாக மழை பெய்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. 4 மாத பருவமழைக் காலம் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையத் தலைவா்... மேலும் பார்க்க

ஆசிரியர் தகுதித் தேர்வு: உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தமிழக அரசு மனு

நமது நிருபர்பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியில் தொடர்வதற்கும், பதவி உயர்வு பெறுவதற்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (டிஇடி) தேர்ச்சிப் பெறுவது கட்டாயம் என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோர... மேலும் பார்க்க

மிதமாக உயா்ந்த உள்நாட்டு விமானப் போக்குவரத்து

கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட உள்நாட்டு விமானப் பயணங்களின் எண்ணிக்கை முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் மிதமாக அதிகரித்துள்ளது. இது குறித்து சந்தை பகுப்பாய்வு நிறுவ... மேலும் பார்க்க