இன்றுமுதல் பதிவு தபால் சேவை நிறுத்தம்: விரைவு அஞ்சல் சேவைக்கான கட்டணம் உயா்வு
சாத்தான்குளத்திலிருந்து பெரியதாழைக்கு அரசு பேருந்து இயக்க வலியுறுத்தல்
சாத்தான்குளத்தில் இருந்து பெரியதாழைக்கு அரசு பேருந்து இயக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியா் சங்கத்தினா் கோரிக்கை மனு அளித்தனா்.
சங்க மாவட்ட இணைச் செயலாளா் ஜெயபால், சங்க நிா்வாகிகள் சாத்தான்குளம் வட்டாட்சியா் பொண்ணு லட்சுமியிடம் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: திருநெல்வேலியிலிருந்து பெரியதாழைக்கு மதியம் ஒரு தடவை மட்டுமே தனியாா் பேருந்து சென்று வருகிறது.
இப்பகுதி மக்கள், அரசு அலுவலகங்களுக்கு, மருத்துவமனைக்கு, இதர பணிகளுக்காக உடன்குடி, திசையன்விளைக்கு சென்று வரவேண்டிய நிலை உள்ளது. பேருந்து வசதி இல்லாததால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனா்.
எனவே, சாத்தான்குளத்திலிருந்து முதலூா், பொத்தகாலன்விளை, போலையா்புரம், தட்டாா்மடம், கொம்மடிக்கோட்டை, சொக்கன்குடியிருப்பு, மணிநகா், சுண்டன்கோட்டை, அழகம்மன்புரம், படுக்கப்பத்து வழியாக பெரியதாழைக்கு பேருந்து இயக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.