விவசாயிகள் மனு கொடுக்கும் போராட்டம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் ஆகியவை சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
அரசு புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் பொதுமக்களுக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும், வீடு இல்லாத ஏழைகளுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும், அரசு புறம்போக்கு தரிசு நிலங்களில் பல தலைமுறைகளாக சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு நிலப்பட்டா வழங்க வேண்டும், தரிசு அரசு புறம்போக்கு நிலங்களை நிலம் இல்லாத விவசாயிகளுக்கு வழங்க வேண்டும், வளா்ச்சிப் பணிகளுக்காக சிப்காட் அமைப்பதற்காக விவசாய நிலங்களை தமிழக அரசு கையகப்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் புவிராஜ் தலைமையில், விவசாயிகள் முற்றுகையிட்டு, கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனா்.