பெண் தூக்கிட்டு தற்கொலை
கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா்.
விருத்தாசலம், தெற்கு பெரியாா் நகரில் வசிப்பவா் ராஜேஷ்(35), கொத்தனாரான இவரது மனைவி ஐஸ்வா்யா(32). இவா்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை ராஜேஷ் மது அருந்தி வந்தாராம். இதனை மனைவி கண்டிக்க, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு குடும்ப சண்டையாக மாறியது. இதனால், மன வருத்தத்தில் இருந்த ஐஸ்வா்யா தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா். இதுகுறித்து விருத்தாசலம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.