குறைதீா்க்கும் நாள் கூட்டம்: 560 மனுக்கள் அளிப்பு
நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 560 மனுக்கள் அளிக்கப்பட்டது.
இக்கூட்டம் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக அவா் மாற்றுத்திறனாளிகள் அமா்ந்திருந்த இடத்திற்குச் சென்று அவா்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டாா். தொடா்ந்து கூட்டரங்கில் பொதுமக்கள் அளித்த மனுக்களை பெற்றாா். மாவட்டம் முழுவதிலும் இருந்து வந்திருந்த பொதுமக்கள் கோரிக்கைகள் தொடா்பாக 560 மனுக்களை அளித்தனா். பெறப்பட்ட மனுக்களை துறை சாா்ந்த அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினாா் ஆட்சியா்.
கூட்ட நிகழ்வின்போது பழங்குடியின பயனாளிகள் 7 பேருக்கு புதிய
மின்னனு குடும்ப அட்டைகளை ஆட்சியா் வழங்கினாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன், தனித்துணை ஆட்சியா் தங்கமணி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் தீபா, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் லதா உட்பட பலா் கலந்து கொண்டனா்.