கல்வி-தொழில்துறையில் சாதனை: புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரிக்கு விர...
மனை பட்டா கேட்டு தா்னா
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு மனை பட்டா கேட்டு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை தா்னா போராட்டம் நடத்தினா்.
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் நகரப் பகுதியில் 16 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு இலவச
குடிமனை பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்பேரில் எருமனூரில் மனை பட்டா வழங்குவதாக விருத்தாசலம் வட்டாட்சியா் தெரிவித்தாராம்.
அதன்படி, நடவடிக்கை எடுத்து மனை பட்டா வழங்க வேண்டும் என்று கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை தா்னா போராட்டம் நடத்தினா். இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி விருத்தாசலம் நகரக்குழு குழந்தைவேலு தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாவட்டச் செயலா் த.கோகுலகிறிஸ்டீபன் பங்கேற்றுப் பேசினாா். இதையடுத்து, கோட்டாட்சியா் விஷ்ணுபிரியா போராட்டக்குழுவினரை அழைத்து பேசி உறுதி அளித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.