செய்திகள் :

வீட்டிலிருந்தே வேலை என்ற விளம்பரங்கள்... மோசடியாளர்கள் விரிக்கும் வலை!

post image

இணையதளங்களில் வரும் வேலை வாய்ப்பு விளம்பரங்கள் அனைத்துமே உண்மையல்ல, அவை சைபர் குற்றவாளிகளால் அனுப்பப்பட்ட தூண்டிலாக இருக்கலாம் என எச்சரிக்கிறது சைபர் குற்றங்கள் தடுப்புப் பிரிவு.

ஒருவர், வேலை தேடுபவராக இருந்தால், அவர்களை சைபர் குற்றவாளிகள் எளிதாக அணுகும் வாய்ப்பு உள்ளது. தகவல் தொழில்நுட்பம் வளர்ந்த அளவுக்கு மோசடிகளும் வளர்ந்துள்ளன. மோசடியாளர்களும் புது புது வகையில் மோசடிகளை கட்டவிழ்த்து வருகிறார்கள்.

வழக்கமாக, வேலை வாய்ப்பு பற்றிய விளம்பரங்களை வெளியிடும் இணையதளங்கள் மூலமும், இணையதளங்களில் வரும் இலவச விளம்பரங்கள் மூலமும் மோசடிகள் நடப்பது மிகவும் எளிதான மோசடிகளில் ஒன்றாக உள்ளது.

வெளிநாட்டில் வேலை, அதிக ஊதியத்தில் வேலை, வீட்டிலிருந்தே வேலை, விடியோவுக்கு லைக் செய்தால் ஊக்கத் தொகை, விடியோவை பார்த்தாலே ஊதியம் என இணையதளங்களில் வரும் வேலை வாய்ப்பு விளம்பரங்கள் மூலம் ஏராளமான மோசடி நாள்தோறும் நடந்துகொண்டே இருக்கிறது.

இப்படி சிக்குபவர்களிடமிருந்து சில நூறுகள் முதல் சில ஆயிரங்களை மோசடியாளர்கள் பறித்து வங்கிக் கணக்கில் நிரப்பி வருகிறார்கள். இது பற்றி ஏமாந்தவர்களில் பெரும்பாலானோர் புகார் கொடுப்பதுமில்லை.

வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் என வரும் விளம்பரத்தைப் பார்த்து தொடர்புகொண்டால், தட்டச்சு செய்யும் வேலை இருப்பதாகவும், ஒரு வேலையை அனுப்ப ரூ.1,000 அல்லது ரூ.2,000 வரை முன்பணம் செலுத்த வேண்டும் என்றும் மோசடியாளர்கள் கூறுவார்கள்.

அந்தப் பணத்தை செலுத்தினால்தான் பணி வழங்கப்படும் என்று கூறும்போது, வேலைவாய்ப்புக்காக இந்த சொற்ப பணத்தை அனுப்புவார்கள். பிறகு, நாம் விண்ணப்பித்த அந்த வேலை முடிந்துவிட்டதாகவும், மற்றொரு வேலை இருப்பதாகவும், அதற்கு சற்று பெரிய தொகை செலுத்த வேண்டும் என்றும் கூறுவார்கள்.

ஒருவேளை, இது மோசடி என தெரிந்துகொண்டு உஷாரானால் சிறிய தொகையோடும், தெரியாமல் அவர்கள் சொல்லும் அடுத்தத் தொகையை செலுத்தினால் சற்று பெரிய தொகையோடும் மோசடி கணக்கு முடித்து வைக்கப்படும்.

பிறகு எந்த வேலையும் வராது, பணமும் கிடைக்காது. இப்படி பல வேலைவாய்ப்பு மோசடிகள் நாள்தோறும் நடந்துகொண்டுதானிருக்கிறது. இதனைத் தடுக்க ஒருபக்கம் நடவடிக்கை எடுத்தாலும், மறுபக்கம் அவர்கள் வேறொரு ரூபத்தில் வேலையத் தொடங்கிவிடுகிறார்கள்.

சைபர் குற்றங்களில் முதலிடம் தனிநபர் தகவல் திருட்டு!

மக்கள் எப்போதும் சைபர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். காவல்துறையினர் கொடுக்கும் விழிப்புணர்வு தகவல்களை அறிந்துகொண்டால்தான் மோசடிகளிலிருந்து தப்பிக்க முடியும்.சைபர் திருட்டுகளில்... மேலும் பார்க்க

வங்கிக் கணக்கு பாஸ்வேர்டு இப்படி இருக்கவே கூடாது!

சைபர் குற்றங்களுக்கு மோசடியாளர்கள் எவ்வாறு முக்கிய காரணமோ, அவர்களுக்கு உதவும் மக்களும் நிச்சயம் மற்றொரு காரணமாக இருக்கிறார்கள் என்கிறார்கள் சைபர் பாதுகாப்புத் துறை நிபுணர்கள்.மிகவும் பாதுகாப்பாக இருக்... மேலும் பார்க்க

சைபர் தாக்குதலின் வகைகள்? யாரெல்லாம் இலக்கு?

டிஜிட்டல் தொழில்நுட்பம் நம் வாழ்வின் அங்கமாக மாறி வரும் சூழலில், சைபர் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை மிகைப்படுத்த முடியாது.இந்தாண்டு சைபர் குற்றங்களால் ஏற்படும் இழப்புகள் சுமார் 10.5 டிரில்லியன் டாலரை... மேலும் பார்க்க

பெரும் பணக்காரராக எளிமையான பத்து விஷயங்கள்!

இந்தியாவில் பெரும் கோடீஸ்வர குடும்பங்கள் அதிகம் வாழும் மாநிலங்களில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. தமிழகம் பணக்கார மாநிலமாக இருக்கலாம், ஆனால், அதில் வாழும் அனைவரும் பணக்காரர்களாக இருப்பதில்லை.... மேலும் பார்க்க

நாட்டின் மிக நீண்ட கண்ணாடிப் பாலம்! எங்கு அமைகிறது?

நாட்டிலேயே மிக நீளமான கண்ணாடி பாலம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் இது மக்கள் பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது. மேலும் பார்க்க

மனித நுரையீரலில் வளர்ந்த பட்டாணிச் செடி!

மூச்சு விட முடியாமல் அபாய கட்டத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரோன் ஸ்வேடன் என்பவரின் நுரையீரலை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்களுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை.காரணம், அது பார்க்க செடி... மேலும் பார்க்க