செய்திகள் :

ஆறுதல்கூட சொல்லாமல் ஒரு தலைவர் சென்றது இதுவரை பார்த்திராத ஒன்று: கனிமொழி கடும் விமர்சனம்

post image

தவெக தலைவர், நிர்வாகிகளுக்கு மனிதாபிமானம் இல்லை என்றுதான் தோன்றுகிறது என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய திமுக எம்.பி. கனிமொழி, "இறந்துபோன குழந்தைகள், இளைஞர்களின் குடும்பத்திற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. இப்படி ஒரு துயரச் சம்பவம் நடந்திருக்கக் கூடாது. இது யாரையும் குறை சொல்லும் நேரமில்லை. யாரையும் குற்றம் சொல்வது தேவையில்லாத ஒன்று. இத்தகைய சூழலில் மக்களுடன் நிற்க வேண்டும்.

யார் மீது தவறு இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் கூறியிருக்கிறார். இந்த சூழ்நிலையில் மனிதர்களோடு மனிதராக நிற்க வேண்டும்.

ஒரு கட்சியின் தலைவர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு ஆறுதல்கூட சொல்லாமல் அந்த இடத்தை விட்டுப் போவதோ அல்லது தன்னுடைய பாதுகாப்பை மட்டும் கருதுவதோ நிச்சயமாக நான் இதுவரை பார்த்திராத ஒன்று. அவரால் இருக்க முடியவில்லை என்றால் அந்த இயக்கத்தைச் சார்ந்த அடுத்த கட்ட தலைவர்கள் இருந்திருக்க வேண்டும். மற்ற கட்சிகளில் அப்படிதான் இருக்கிறார்கள். இந்த சூழலைப் பார்க்கும்போது அவர்களுக்கு மனிதாபிமானம் இல்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

ஒரு பொறுப்பான தலைவர் அந்த இடத்தை விட்டுச் சென்றிருக்கக் கூடாது. நீங்கள் சென்றாலும் குறைந்தபட்சம் உங்கள் கட்சி நிர்வாகிகளாவது அங்கு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நடந்ததற்கு கொஞ்சமாவது பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும்.

தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் பதிவு உச்சகட்ட பொறுப்பின்மையை காட்டுகிறது. சூழலை அமைதியாக்க நினைக்காமல் வன்முறை தூண்டும் வகையில், இன்னும் உயிரிழப்புகள் ஏற்படுத்தும் வகையிலான பேச்சுகள் தவிர்க்கப்பட வேண்டும். மக்களைப் பற்றி கவலை இல்லாமல், எப்படியாவது அரசியல் ஆதாயம் பெற வேண்டும் என நினைப்பது தவறு.

சிபிஐ விசாரணை வேண்டும் என யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் கேட்கலாம். தனிநபர் ஆணையம் நியமிக்கப்பட்டு இருக்கிறது. விசாரணைக்கு அடுத்த நாளே வந்துவிட்டார்கள். விசாரணை தொடங்கி இருக்கிறது" என்று பேசியுள்ளார்.

DMK MP kanimozhi on tvk stampede tragedy

இதையும் படிக்க | பிரசார கூட்டத்தில் மின்சாரத்தை துண்டித்தது யார்? திமுக மீது வீண் பழி சுமத்துகிறதா தவெக?

ஆயுத பூஜை: அனல் பறக்கும் பூக்கள் விலை!

ஆயூத பூஜை, விஜய தசமியை ஓட்டி தஞ்சை பூச்சந்தையில் பூக்களின் விலை வழக்கத்தை விட நான்கு மடங்கு உயர்ந்து உள்ளது.விழாக் காலம் என்பதால், விலை அதிகமாக இருந்தாலும், குறைவான அளவில் மக்கள் பூக்களை வாங்கிச் செல்... மேலும் பார்க்க

கூட்டம் அதிகரித்தவுடன் பிரசாரத்தை நிறுத்தாதது ஏன்? தவெகவுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி!

விஜய்யின் பிரசாரக் கூட்டம் நடத்துவதற்கு திடல் போன்ற பகுதியை தமிழக வெற்றிக் கழகத்தினர் கேட்காதது ஏன்? என்று கரூர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.கரூரில் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்ட... மேலும் பார்க்க

கரூர் கொடுந்துயரத்தில் அரசியல் விளையாட்டை தொடங்கிவிட்டது பாஜக: திருமாவளவன்

கரூர் கொடுந்துயரத்தில் தனது அரசியல் விளையாட்டை, பாஜக வெளிப்படையாகத் தொடங்கிவிட்டதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் விமர்சித்துள்ளார்.கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற தவெக பிரசாரக் க... மேலும் பார்க்க

தி.நகர் மேம்பாலத்தை திறந்துவைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

சென்னை தியாகராய நகர் உஸ்மான் சாலையில் ரூ.165 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இரும்பு மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(செவ்வாய்க்கிழமை) திறந்து வைத்தார். உஸ்மான் சாலை - சிஐடி நகரை இணைக்கும் வ... மேலும் பார்க்க

கரூர் சென்ற பாஜக எம்பிக்கள் கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

கோவையில் இருந்து கரூர் சென்றுகொண்டிருந்த பாஜக எம்பிக்களின் கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் கார்கள் லேசான சேதமடைந்த நிலையில், எம்பிக்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெ... மேலும் பார்க்க

கரூர் சம்பவம்! முன் ஜாமீன் கோரி புஸ்ஸி ஆனந்த் மனு தாக்கல்!

கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் 41 பேர் பலியான வழக்கில், முன் ஜாமீன் கோரி அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். கரூர் வேல... மேலும் பார்க்க