செய்திகள் :

கரூர் சம்பவம்! முன் ஜாமீன் கோரி புஸ்ஸி ஆனந்த் மனு தாக்கல்!

post image

கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் 41 பேர் பலியான வழக்கில், முன் ஜாமீன் கோரி அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில், கடந்த செப்.27 ஆம் தேதி இரவு தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு பயண பிரசாரக் கூட்டத்தில் அதிகப்படியான மக்கள் திரண்டதால் நெரிசல் ஏற்பட்டது. இதில், 41 பேர் பலியாகினர்.

இந்த விவகாரத்தில், தவெகவின் கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது காவல் துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை காணவில்லை என சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின. மேலும், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் மாநகர நிர்வாகி மாசி பவுன்ராஜ் இருவரும் கைது செய்யப்பட்டு கரூர் நீதிமன்றத்தில் இன்று (செப். 30) ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ஆறுதல்கூட சொல்லாமல் ஒரு தலைவர் சென்றது இதுவரை பார்த்திராத ஒன்று: கனிமொழி கடும் விமர்சனம்

The party's general secretary, Pussy Anand, has filed a petition in the Madurai branch of the High Court seeking anticipatory bail.

திருவள்ளூர் உள்பட 2 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.இன்று (30-09-2025), வடக்கு அந்... மேலும் பார்க்க

பேசக்கூடிய மனநிலையில் இல்லை: ஆதவ் அர்ஜுனா

தற்போது எதையும் பேசக்கூடிய மனநிலையில் இல்லை என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மை பிரிவின் பொதுச் செயலர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.கரூர் விஜய் பிரசாரக் கூட்டநெரிசலில் 41 பேர் பலிய... மேலும் பார்க்க

கோவைக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல்: 1,010 இ-மெயில் முகவரிகள் கண்காணிப்பு! - சைபர் கிரைம்

கோவைக்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்ந்து வரும் நிலையில் 1,010 இ-மெயில் ஐ.டி.களை காவல்துறையினர் கண்டுபிடித்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சமீப காலமாக விமான நிலையங்கள், அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்ல... மேலும் பார்க்க

கரூரில் கே.சி. வேணுகோபால்! பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்!

கரூர் கூட்டநெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற தவெக தலைவர் விஜய் தலைமையிலான பிரசாரக் கூட்டத்தில் ந... மேலும் பார்க்க

கரூர் பலி: அரசியல் விளையாட்டைத் தொடங்கிவிட்டது பாஜக! - திருமாவளவன்

கரூர் நெரிசல் பலி விவகாரத்தில் பாஜக தனது அரசியல் விளையாட்டை வெளிப்படையாகத் தொடங்கிவிட்டது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக... மேலும் பார்க்க

கரூரில் பாஜக எம்பிக்கள் குழு ஆய்வு!

கரூரில் கூட்டநெரிசல் பலி குறித்து ஹேமமாலினி தலைமையிலான பாஜக குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற தவெக தலைவர் விஜய் தலைமையிலான பிரசாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி, 41 பேர் ப... மேலும் பார்க்க