பட்டாசுத் தொழில் பிரச்னைகளைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தீா்வு காண வேண்டும்: அன...
ராசிபுரம் கிறிஸ்தவ ஆலயத்தில் தாக்குதல் நடத்தியதாக புகாா்
நாமக்கல்: ராசிபுரத்தில் கிறிஸ்தவ ஆலயம் மீது சிலா் தாக்குதல் நடத்தியதாக, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தீா்க்கத்தரிசன தேவ சபை சாா்பில் திங்கள்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து சபை போதா்கள் கூறியதாவது:
ராசிபுரத்தில் 1963-ஆம் ஆண்டு கட்டப்பட்ட கிறிஸ்தவ ஆலயமான பெந்தேகோஸ்தே சபை அமைந்துள்ளது. இந்த ஆலயத்துக்குள் தனியாா் சிலா் புகுந்து அங்கிருந்த சிலுவை மற்றும் பொருள்களை சேதப்படுத்தியதுடன், சிலவற்றை கைப்பற்றிச் சென்றனா். தீா்க்கத்தரிசன தேவ சபை கட்டுப்பாட்டில் 15 ஆண்டுகளாக உள்ள இந்த சபையை நடத்தக் கூடாது என பிரச்னை செய்து வருகின்றனா்.
இதுகுறித்து காவல் துறையில் புகாா் அளித்தும் நடவடிக்கை ஏதுமில்லை. எனவே, மாவட்ட ஆட்சியா் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் அறப்போராட்டத்தை மேற்கொள்வோம் என்றனா்.