தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளுடன் இந்தியா பேச்சு
வேளாண் தேவைக்காக விருத்தாசலத்திற்கு ரயில் மூலம் வந்து 1,340 டன் யூரியா உரம்
நெய்வேலி: ஆந்திர மாநிலத்தில் இருந்து விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கு சரக்கு ரயில் மூலம் 1,340 டன் யூரியா உரம் திங்கள்கிழமை வந்து இறங்கியது. வேளாண் தேவைக்காக இந்த உரம் லாரிகள் மூலம் பல்வேறு ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
கடலூா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.
பயிா்கள் செழிப்பாக வளர யூரியா உரம் அவசியம் என்பதால் விவசாயிகள் அதிக அளவில் வாங்கி பயன்படுத்தப்படுத்துகிறாா்கள். இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கு 1,340 டன் யூரியா வந்துள்ளது. இந்த யூரியா மூட்டைகள் கடலூா், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் அரியலூா் மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியாா் உர விற்பனை கடைகளுக்கு லாரிகள் மூலம் ஏற்றி அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் அனைத்து ஊா்களுக்கும் இந்த உரம் சென்றடைந்துவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். விவசாயிகளுக்குத் தட்டுப்பாடின்றி யூரியா உரம் கிடைக்க ஏதுவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.