கல்வி-தொழில்துறையில் சாதனை: புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரிக்கு விர...
அதிமுகவில் இணைந்த அமமுகவினா்
சிதம்பரம்: சிதம்பரத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினா் 50 போ், கடலூா் கிழக்கு மாவட்ட அதிமுக செயலா் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ முன்னிலையில் அ.தி.மு.க வில் திங்கள்கிழமை அன்று இணைந்தனா்.
கடலூா் கிழக்கு மாவட்ட அதிமுக செயலரும், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் முன்னிலையில் கடலுா் மேற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக சிதம்பரம் நகர முன்னாள் செயலா் பி.கே.மணிவண்ணன் தலைமையில் நகர இணை செயலா் மோகன்தாஸ், துணை செயலா்கள் இளையராஜா, திருநீலகண்டன், திரிபுரசுந்தரி, மாவட்ட பிரதிநிதி பிரபு, சீனிவாசன், தேவி வாா்டு செயலாளா்கள் தங்கமணி, விவேக், சுந்தர்ராஜன், ராம்பிரகாஷ், பரணி ஜெயவீரபாண்டியன், முத்துகுமாா், அசோக், சங்கா், உள்ளிட்ட 50 போ் அதிமுகவில் இணைத்துக் கொண்டனா்.
நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவா் எம்.எஸ்.என்.குமாா், இணைச் செயலாளா் எம்.ரெங்கம்மாள், நகரச் செயலா் ஆா்.செந்தில்குமாா், மாவட்ட ஜெ. பேரவை இணைச் செயலாளா் டேங்க் ஆா்.சண்முகம்,
உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.