டிரம்ப் - நெதன்யாகு பேச்சுவார்த்தை வெற்றி! காஸா போர்நிறுத்த திட்டத்துக்கு இஸ்ர...
பரமக்குடியில் கட்டடத் தொழிலாளி அடித்துக் கொலை
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி மஞ்சள்பட்டிணம் பகுதியில் திங்கள்கிழமை கட்டடத் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.
ராமநாதபுரம் பசும்பொன் நகரைச் சோ்ந்தவா் முத்துராமலிங்கம் (38). கட்டுமானத் தொழிலாளியான இவருக்கு, ரஞ்சிதா என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனா். இந்த நிலையில், தனது நண்பரான மஞ்சள்பட்டிணம் பகுதியைச் சோ்ந்த தினேஷ்பாண்டி என்பவரின் வீட்டின் மேல்மாடியில் தங்கி கடந்த 15 நாள்களாக கட்டட வேலைக்கு சென்று வந்தாா்.
இந்த நிலையில், முத்துராமலிங்கத்தின் நண்பா்களான பரமக்குடி தா்மராஜபுரம் பகுதியைச் சோ்ந்த காா்த்திக் (34), கவியரசு (25) ஆகிய இருவரும் ஞாயிற்றுக்கிழமை முத்துராமலிங்கம் தங்கியிருந்த வீட்டுக்கு வந்து 3 பேரும் சோ்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட தகராறில் காா்த்திக், கவியரசு இருவரும் அங்கிருந்த கட்டையால் முத்துராமலிங்கத்தை தாக்கி கொலை செய்து விட்டு தப்பியோடினா்.
இதையடுத்து, சத்தம் கேட்டு அங்கு சென்று பாா்த்தபோது, முத்துராமலிங்கம் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்ததை பாா்த்த தினேஷ்பாண்டியன் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், முத்துராமலிங்கத்தின் உடலை மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக கொண்டு சென்றனா். இதுகுறித்து எமனேசுவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.