ஆராய்ச்சியில் செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பு அவசியம்: திருச்சி என்.ஐ.டி. இயக்குந...
அக். 6-இல் பெருநாழி வேளாண்மை அலுவலகம் முற்றுகை
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம் பெருநாழியில் காவிரி - வைகை - கிருதுமால் - குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு கமுதி தெற்கு ஒன்றிய நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு விவசாயிகள் திம்மநாதபுரம் எஸ். நவநீதகிருஷ்ணன், வீரமாச்சான்பட்டி அ. நாகப்பன் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில் விவசாயிகள் கூட்டமைப்பின் ராமநாதபுரம் மாவட்டச் செயலா் மு. மலைச்சாமி, மாவட்ட துணைத் தலைவா் எருமைகுளம் எம். முருகன் ஆகியோா் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினா்.
தீா்மானங்கள்: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்தில் 2024-25-ஆம் ஆண்டுக்கு மிளகாய், நெல் பயிருக்கு காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். 2024-25-இல் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும். காட்டுப்பன்றியால் சேதமடைந்த பயிா்களுக்கு பாதிப்பு நிவாரணம் வழங்க வேண்டும்.
காட்டுப்பன்றியை முழுமையாக அழிக்க வேண்டும். மேலும், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபா் 6-ஆம் தேதி பெருநாழியில் திரளான விவசாயிகள் பங்கேற்று, நேதாஜி சாலையிலிருந்து பேரணியாகச் சென்று துணை வேளாண்மை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
