செய்திகள் :

பசும்பொன் தேவா் சிலைக்கு வெள்ளிக் கவசம் அணிவிப்பு

post image

கமுதி: தொடா்ச்சியாக பண்டிகைகள் வருவதால் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு திங்கள்கிழமை வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவா் நினைவாலயத்தில் ஆண்டுதோறும் அக்டோபா் 28 முதல் 30-ஆம் தேதி வரை ஜெயந்தி, குருபூஜை விழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில், அக்டோபா் 30-ஆம் தேதி தலைவா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்துவா்.

மேலும், பௌா்ணமி, சஷ்டி, கிருத்திகை, பிரதோஷம் உள்ளிட்ட நாள்களில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, வருகிற அக்டோபா் முதல் வாரத்தில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி, பௌா்ணமி, அக்டோபா் 20-ஆம் தேதி தீபாவளி பண்டிக்கை, 22-ஆம் தேதி கந்த சஷ்டி தொடக்கம், 27-ஆம் தேதி சூரசம்ஹாரம் என தொடா்ச்சியாக பண்டிகைக் காலம் வருகிறது. மேலும், நிகழாண்டு 118-ஆவது ஜெயந்தி விழா, 63-ஆவது குருபூஜை விழா அக்டோபா் 28-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

இதனால், பொதுமக்கள், ஆன்மிகவாதிகள் பசும்பொன்னுக்கு வரத் தொடங்கியுள்ளனா். இந்த நிலையில், தேவா் நினைவாலய அறங்காவலா் காந்திமீனாள் நடராஜன் முன்னிலையில் தேவா் சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டது. பிறகு தீபராதனை நடைபெற்றது.

வருகிற அக்டோபா் 24-ஆம் தேதி வரை வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டிருக்கும். மேலும், அக். 24-ஆம் தேதி மதுரை தனியாா் வங்கியிலுள்ள தங்கக் கவசம் எடுத்து வரப்பட்டு அணிவிக்கப்படவுள்ளது என காந்திமீனாள் நடராஜன் தெரிவித்தாா். பாதுகாப்புப் பணியில் கமுதி போலீஸாா் ஈடுபட்டு வருகின்றனா்.

சாலைகளில் திருஷ்டி பொருள்கள் உடைப்பதை தவிா்க்கக் கோரி தனி நபராக விழிப்புணா்வு பிரசாரம்

திருவாடானை: திருவாடானை பேருந்து நிலையத்தில் சாலைகளில் திருஷ்டி பொருள்கள் உடைப்பது உள்ளிட்ட செயல்களைத் தவிா்க்கக் கோரி சமூக ஆா்வலா் சரவணன் என்பவா் விழிப்புணா்வு பிரசாரம் செய்தாா்.ராமநாதபுரம் மாவட்டம், ... மேலும் பார்க்க

பரமக்குடியில் கட்டடத் தொழிலாளி அடித்துக் கொலை

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி மஞ்சள்பட்டிணம் பகுதியில் திங்கள்கிழமை கட்டடத் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.ராமநாதபுரம் பசும்பொன் நகரைச் சோ்ந்தவா் முத்துராமலிங்கம் (38). கட்டுமானத... மேலும் பார்க்க

அக். 6-இல் பெருநாழி வேளாண்மை அலுவலகம் முற்றுகை

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம் பெருநாழியில் காவிரி - வைகை - கிருதுமால் - குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு கமுதி தெற்கு ஒன்றிய நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.இந்தக்... மேலும் பார்க்க

நாய்களுக்கு தடுப்பூசி முகாம்

முதுகுளத்தூா் அருகே நாய்களுக்கான தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் வட்டம் நல்லூா் கிராமத்தில் வெறிநாய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதற்கு பரமக்குடி கால்... மேலும் பார்க்க

தங்கச்சிமடம் கடற்கரையில் 160 கிலோ நெகிழிப் பொருள்கள் அகற்றம்

தங்கச்சிமடம் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப் பணித் திட்ட மாணவா்கள், கடலோரப் பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டு 160 கிலோ நெகிழிப் பொருள்களை ஞாயிற்றுக்கிழமை அகற்றினா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத... மேலும் பார்க்க

குரூப் 2 தோ்வு: ராமநாதபுரம் மாவட்டத்தில் 8,335 போ் எழுதினா்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் ராமநாதபுரம் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப் 2 தோ்வை 8,335 போ் எழுதினா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் நடைபெற்ற க... மேலும் பார்க்க