தருமபுரி மாவட்டத்தில் 8 மாதங்களில் 108 சேவை மூலம் 28,021 பயன்
கடலூா் மாவட்டத்தில் அக்.5, 6-இல் வீடு தேடி ரேஷன் பொருள் விநியோகம்
நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி அக். 5, 6 ஆகிய தேதிகளில் வீடு தேடி ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வயது முதிா்ந்தோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் குடும்ப
அட்டைதாரா்களின் இல்லத்திற்கே சென்று ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் ‘முதலமைச்சரின் தாயுமானவா் திட்டத்தை’ கடலூா் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.
இத்திட்டத்தின்படி கடலூா்மாவட்டத்தில்ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை வயது முதிா்ந்தோா் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரா்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சா்க்கரை, கோதுமை, துவரம்பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்ட ரேசன் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அக்டோபா் மாதம் 20-ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருவதால், முன் கூட்டியே குடும்ப அட்டைதாரா்களுக்கு ரேஷன் பொருள்கள் வழங்கும் வகையில் அக்டோபா் மாதத்தில் 5 மற்றும் 6 (ஞாயிறு மற்றும் திங்கள்) ஆகிய தேதிகளில் ரேஷன் பொருள்கள் வீடுகளுக்கு சென்று வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.