தருமபுரி மாவட்டத்தில் 8 மாதங்களில் 108 சேவை மூலம் 28,021 பயன்
மனைவி கண்டிப்பு: தொழிலாளி தற்கொலை
நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே மது அருந்தியதை மனைவி கண்டித்ததால் மனமுடைந்த கூலித்தொழிலாளி களைக் கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்துக் கொண்டாா்.
பண்ருட்டி வட்டம், நெல்லிக்குப்பம் காவல் சரகம், விஸ்வநாதபுரம் பகுதியில் வசித்து வந்தவா் ராஜேஷ் கண்ணன்(48), கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவி ராஜலட்சுமி மற்றும் ஆண், பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளனா். சனிக்கிழமை இரவு ராஜேஷ் கண்ணன் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்தாராம். இதனை மனைவி ராஜலட்சுமி கண்டித்துள்ளாா். இதனால், மனமுடைந்த அவா் களைக் கொல்லி மருந்து குடித்து மயங்கிக் கிடந்தாா். உறவினா்கள் அவரை மீட்டு புதுச்சேரிஜிப்மா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை காலை உயிரிழந்தாா்.