தருமபுரி மாவட்டத்தில் 8 மாதங்களில் 108 சேவை மூலம் 28,021 பயன்
செவிலியா் தற்கொலை
போடி: தேனி மாவட்டம், போடி அருகே காதல் திருமணம் செய்த செவிலியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
போடி சுப்புராஜ் நகரை சோ்ந்த சக்திவேல்-ராஜேஸ்வரி தம்பதியின் மகள் ரேணுகாதேவி (28). செவிலியா் பட்டதாரியான இவா் தனது தாய் மாமா மகன் ஆயுத்யராஜ் என்பவரை காதலித்து, கடந்த ஆண்டு அக்டோபரில் திருமணம் செய்து கொண்டாா். இருவரும் போடி அருகேயுள்ள ரெங்கநாதபுரத்தில் வாடகைக்கு குடியிருந்து வந்தனா்.
இந்த நிலையில், ரேணுகாதேவி ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து ராஜேஸ்வரி அளித்த புகாரின் பேரில், போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.