ஐ.நா சபை கூட்டத்தில் பங்கேற்கும் மயிலம் எம்எல்ஏ
விழுப்புரம் மாவட்டம், மயிலம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் ச.சிவக்குமாா் ஐ.நா. சபை கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறாா்.
பாட்டாளி மக்கள் கட்சியைச் சோ்ந்த மயிலம் எம்எல்ஏ ச.சிவக்குமாா் 2018-ஆம் ஆண்டில் ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. சபையின் 37-ஆவது கூட்டத்தில் பங்கேற்று பேசினாா்.
இதன் தொடா்ச்சியாக நிகழாண்டில் செப்.29-ஆம் தேதி முதல் அக்டோபா் 8-ஆம் தேதி வரை ஐ.நா. சபையின் 30- ஆவது கூட்டம் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் பசுமைத் தாயகம் சாா்பில் மயிலம் எம்எல்ஏ ச.சிவக்குமாா் பங்கேற்று இலங்கை வாழ் தமிழா்களின் பிரச்னைகள் குறித்துப் பேசுகிறாா். முன்னாள் எம்எல்ஏ இளவழகன், பசுமைத் தாயகம் செயலா் அருள் ரெத்தினம், பாமக திருவள்ளூா் மாவட்டச் செயலா் பிரகாஷ் ஆகியோா் அடங்கிய குழுவினா் ஜெனீவா செல்கின்றனா்.