சென்னையிலிருந்து மங்களூருக்கு நாளை இரவு சிறப்பு ரயில்!
சென்னை சென்ட்ரல் - மங்களூரு இடையே சிறப்பு ரயில் செவ்வாய்க்கிழமை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை சென்ட்ரல் - மங்களூரு சிறப்பு ரயில் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 12.30 மணிக்கு மங்களூரு சென்றடையும்.
இந்த ரயில் பெரம்பூா், திருவள்ளூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை, பாலக்காடு, சொரனூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.