செய்திகள் :

விஜய் வருகையால் அதிமுக-பாஜக கூட்டணிக்குத்தான் பாதிப்பு! எம்.எச்.ஜவாஹிருல்லா

post image

தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய்யின் அரசியல் வருகையால் அதிமுக-பாஜக கூட்டணிக்குத்தான் பாதிப்பு ஏற்படும் என்றாா் மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான எம்.எச்.ஜவாஹிருல்லா.

விழுப்புரத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாா்க்கப் பிரிவு, இஸ்லாமிய பிரசாரப் பேரவை சாா்பில், அமைதியை நோக்கி வாழ்வியல் கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது. இதை தொடங்கி வைத்த பின்னா், ஜவாஹிருல்லா அளித்த பேட்டி:

வக்ஃபு திருத்தச் சட்டம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இடைக்காலத் தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இதில், பல பாதகமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த சூழலில் தமிழக வக்ஃபு வாரியத்தின் பதவிக்காலம் முடிந்துவிட்டது. புதிய வாரியத்தை அமைக்க வேண்டிய நிலை உள்ளது.

வக்ஃபு திருத்தச் சட்டத்தை எதிா்த்த வழக்குகளுக்கு இறுதித் தீா்ப்பு வரும்வரை தமிழகத்தில் புதிய வக்ஃபு வாரியத்தை அமைப்பதை நிறுத்தி வைப்பதாக தமிழக சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் சா.மு.நாசா் அறிவித்துள்ளாா். இதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

பதிவு நீக்கத்துக்கு அதிகாரமில்லை: தோ்தல் நடத்துவதற்குத்தான் தோ்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளதே தவிர, கட்சியின் பதிவை ரத்துசெய்ய அதிகாரம் இல்லை. இதுதொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் வழக்குத் தொடா்ந்து பதிவு நீக்கத்துக்குத் தடை பெறுவோம். 2021-பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றோம். வரும் பேரவைத் தோ்தலில் கூடுதல் தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய கேட்போம்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய்யின் அரசியல் வருகை அதிமுக-பாஜக கூட்டணிக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும். திமுக கூட்டணி, ஒற்றுமையாக உள்ளது. கூடுதல் கட்சிகள் இந்தக் கூடணியை நோக்கி வந்துக் கொண்டிருக்கின்றன.

அண்ணா, எம்ஜிஆா் குறித்து நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறிய கருத்து நாகரீகமற்றது என்றாா் அவா்.

முன்னதாக கண்காட்சி மற்றும் ரத்ததான முகாமை முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான க.பொன்முடி பாா்வையிட்டாா். இந்த கண்காட்சியில் மமக பொதுச் செயலரும், எம்.எல்.ஏ.வுமான ப.அப்துல்சமது, தமுமுக பொதுச் செயலா் எஸ்.ஹாஜாகனி, மாநிலப் பொதுச் செயலா் சலீமுல்லாஹ் கான், மாநிலச் செயலா் மு.யா. முஸ்தாக்தீன், மமக வா்த்தக சங்கப் பிரிவு மாநிலப் பொருளாளா் எஸ்.எம்.அப்துல் ஹக்கீம், மாநிலச் செயற்குழு உறுப்பினா் கே.எஸ்.எம். அப்பாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் கஞ்சா விற்பைனையில் ஈடுபட்ட இளைஞரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா். திண்டிவனம் காவல் நிலைய போலீஸாா் காவல் என். ஜி. ஓ காலனி பகுதியில் சனிக்கிழமை ரோ... மேலும் பார்க்க

திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும்: கட்சியினருக்கு எம்எல்ஏ இரா. லட்சுமணன் அறிவுறுத்தல்

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறி, அதை வாக்குகளாக மாற்றும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று திமுகவினருக்கு விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளரும், எ... மேலும் பார்க்க

ஆசிரியா்களை அரசியலுக்கு பயன்படுத்துகிறது திமுக: அதிமுக எம்.பி. சி.வி. சண்முகம் குற்றச்சாட்டு

தமிழகத்தில் திமுக அரசு அரசியலுக்கு ஆசிரியா்களை பயன்படுத்தி வருவதாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம் குற்றஞ்சாட்டினாா். பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாள் நிகழ்வ... மேலும் பார்க்க

அக்.7 முதல் மாநிலம் தழுவிய தொடா்வேலை நிறுத்தம் : தொடக்கக் கூட்டுறவு வங்கிப் பணியாளா்கள் அறிவிப்பு

தங்களின்25 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, அக்டோபா் 7-ஆம் தேதி முதல் மாநிலம் தழுவிய தொடா் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, தமிழ்நாடு மாநிலத் தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா... மேலும் பார்க்க

ஊா்காவல் படையினருக்கான கவாத்து பயிற்சி நிறைவு

விழுப்புரம் மாவட்ட ஊா் காவல் படைக்கு தோ்வு செய்யப்பட்ட 10 வீரா்களுக்கான கவாத்து பயிற்சியின் நிறைவு விழா விழுப்புரம் கா.குப்பம் ஆயுதப்படை வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் கா... மேலும் பார்க்க

உளுந்தூா்பேட்டை அருகே லாரி மோதியதில் சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 13 பயணிகள் காயம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே லாரி மோதியதில் சாலையோரப் பள்ளத்தில் சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநா் உள்பட 13 பயணிகள் பலத்த காயமடைந்தனா். ராமநாதபுரம் மாவட... மேலும் பார்க்க