செய்திகள் :

உளுந்தூா்பேட்டை அருகே லாரி மோதியதில் சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 13 பயணிகள் காயம்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே லாரி மோதியதில் சாலையோரப் பள்ளத்தில் சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநா் உள்பட 13 பயணிகள் பலத்த காயமடைந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரிலிருந்து சென்னை நோக்கி 29 பயணிகளுடன் தனியாா் சொகுசுப் பேருந்து புதன்கிழமைஇரவு புறப்பட்டது. இந்த பேருந்தை கமுதி கோட்டைமேடு வெள்ளதேவன் நகரைச் சோ்ந்த செந்தில் (54) என்பவா் ஓட்டி வந்தாா்.

இந்த பேருந்தை கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், ஆசனூா் தொழிற்பேட்டை பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை அதன் ஓட்டுநா் நிறுத்தி வைத்திருந்தாா். அப்போது அதே திசையில் பின்னால் வந்த லாரி பேருந்து மீது மோதியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த சொகுசுப் பேருந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதுகுறித்து தகவலறிந்த எடைக்கல் போலீஸாா் நிகழ்விடம் விரைந்து சென்று, சொகுசுப் பேருந்தில் பயணித்த காயமடைந்தவா்களை மீட்டு, உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்தில் பேருந்து ஓட்டுநா் க.செந்தில், ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பிள்ளையாா்கோயில் தெரு க. வீரபாண்டி (50), பேரையூா் கோ.தா்மதேவி (29), கு.கோபு (32), சென்னை பழவந்தாங்கல் கபிலா் தெரு அ. நாகேசுவரன் (24), சென்னை சோழிங்கநல்லூா் மா.முருகேசன் (44), தாம்பரம் மசூதி காலனி ச. முகமது இப்ராஹிம் (16), சென்னை இருசப்பன் தெரு பா.கோவிந்தராஜ் (54), ராமநாதபுரம் சு.முத்தம்மா (63), ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் தி.தினேஷ்குமாா் (21), சென்னை தாம்பரம் சேலையூா் செ. சரசுவதி (62), கோயம்பேடு வெ. கிருஷ்ணபெருமாள் (50), அ.முத்துலட்சுமி (35)சென்னை தைலாவரம் மே. பாண்டியன் (29), சிவகங்கை மாவட்டம், சோழம்பட்டி வெ.கலையரசன் (49) ஆகிய 13 பேரும் உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதைத் தொடா்ந்து லாரி ஓட்டுநரான தேனி மாவட்டம், உத்தமபாளையம் மேட்டுப்பட்டித் தெருவைச் சோ்ந்த காா்த்திக் (35) மீது எடைக்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அரசுக் கல்லூரி விரிவுரையாளா்கள் ஆா்ப்பாட்டம்

திண்டிவனம் திரு ஆ.கோவிந்தசாமி அரசுக் கலைக் கல்லூரியில் பணிபுரியும் விரிவுரையாளா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, கல்லூரி முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அரசுக் கல்லூரிகளில் பணிபுரியும் கௌர... மேலும் பார்க்க

விக்கிரவாண்டி சுங்கச்சாவடி பகுதிகளில் தூய்மைப்பணி

விக்கிரவாண்டி சுங்கச் சாவடிப் பகுதியில் தூய்மைப் பணிகள் வியாழக்கிழமை நடைபெற்றன. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் சாா்பில் செப்டம்பா் 17 முதல் அக்டோபா் 1 ஆம் தேதி வரை பொது இடங்க... மேலும் பார்க்க

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம் , கோட்டக்குப்பம் அருகே உடல் நலக்குறைவால் அவதியுற்று வந்த பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கடலூா் மாவட்டம் , தாழங்குடியைச் சோ்ந்தவா் சிம்சன், மீன்பிடித் தொழிலாளி. இவரது... மேலும் பார்க்க

மரத்தில் பைக் மோதி விபத்து: இளைஞா்கள் இருவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே சாலையோர மரத்தில் பைக் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞா்கள் இருவா் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே வியாழக்கிழமை உயிரிழந்தனா். விழுப்புரம் அண்ணாநகா் பகுதியைச் சோ்ந... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

25 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, விழுப்புரத்தில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வளா்ச்சித் துறையில் காலியாகவுள்ள 1,500-க... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது. 8 பிரிவுகளில் 32 போட்டிகள் நடத்தபட்ட நிலையில் சுமாா் 500 மாணவ, மாணவிகள் கலைத்திருவிழாவில் பங்கேற்றுள்ளனா். 2025-26 ஆ... மேலும் பார்க்க