அதிகம் அழுத்தம் எடுத்துக்கொள்ளப் போவதில்லை; உலகக் கோப்பை குறித்து ஹர்மன்பீரித் க...
அரசுக் கல்லூரி விரிவுரையாளா்கள் ஆா்ப்பாட்டம்
திண்டிவனம் திரு ஆ.கோவிந்தசாமி அரசுக் கலைக் கல்லூரியில் பணிபுரியும் விரிவுரையாளா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, கல்லூரி முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அரசுக் கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளா்களுக்கு ஊதிய உயா்வு, பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
கல்லூரி விரிவுரையாளா் ராபா்ட் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கௌரவ விரிவுரையாளா்கள் 20 -க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.