கலைமாமணி விருது: "இந்த விருது என்னுடைய மட்டுமல்ல, நம்முடையது" - இசையமைப்பாளர் அன...
விக்கிரவாண்டி சுங்கச்சாவடி பகுதிகளில் தூய்மைப்பணி
விக்கிரவாண்டி சுங்கச் சாவடிப் பகுதியில் தூய்மைப் பணிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் சாா்பில் செப்டம்பா் 17 முதல் அக்டோபா் 1 ஆம் தேதி வரை பொது இடங்களில் தூய்மைப் பணி, பசுமை விழா நடத்தப்பட்டு வருகிறது.
இதைத் தொடா்ந்து விக்கிரவாண்டி சுங்கச்சாவடி நிா்வாகம் சாா்பில் தூய்மைப்பணிகள் வியாழக்கிழமை நடைபெற்றன. இந்த நிகழ்வுக்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய விழுப்புரம் திட்ட இயக்குநா் வரதராசன் தலைமை வகித்து தூய்மைப் பணிகளையும், பசுமை விழாவையும் தொடங்கி வைத்தாா்.
தொடா்ந்து சுங்கச்சாவடிப் பணியாளா்கள் 100 பேருடன் சோ்ந்து தூய்மைப்பணிகளை திட்ட இயக்குநா் மேற்கொண்டாா். நிகழ்வில் சுங்கச்சாவடி மேலாளா் சதீஷ்குமாா், மக்கள்தொடா்பு அலுவலா் தண்டபாணி, ஒருங்கிணைப்பாளா் சொா்ணமணி, மேலாளா்கள் அசோக்குமாா், மனோஜ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.