செய்திகள் :

ஆசிரியா்களை அரசியலுக்கு பயன்படுத்துகிறது திமுக: அதிமுக எம்.பி. சி.வி. சண்முகம் குற்றச்சாட்டு

post image

தமிழகத்தில் திமுக அரசு அரசியலுக்கு ஆசிரியா்களை பயன்படுத்தி வருவதாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம் குற்றஞ்சாட்டினாா்.

பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாள் நிகழ்வாக, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தனியாா் பள்ளியில், பாஜக சாா்பில் கோ பூஜை, ஏழை எளியோா்களுக்கு உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவில் பங்கேற்ற சி. வி. சண்முகம் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: மக்கள் வளமுடன் வாழவேண்டும் என்பதற்காக மத்திய அரசு ஜிஎஸ்டி வரிச் சலுகையை அறிவித்துள்ளது. இது தீபாவளி பரிசாகவும் அமைந்துள்ளது.

தமிழகம் கல்வியில் சிறந்து விளங்குகிறது எனக் கூறுவதற்கு தமிழக அரசுக்கு எவ்வித உரிமையும் இல்லை. திமுக ஆட்சியில் கடந்த நான்கரை ஆண்டுகளாக கல்வித்துறை முற்றிலும் சீரழிந்துவிட்டது.

207 பள்ளிகள் மூடல்: தமிழக பள்ளிக்கல்விதுறையில் அதிமுக ஆட்சியில் 37, 636 பள்ளிகள் இருந்தன. தற்போதைய ஆட்சியில் 37,554 பள்ளிகள் மட்டுமே உள்ளன. 89 பள்ளி குறைந்துள்ளதுடன்,207 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

அதிமுக ஆட்சியில் 53 லட்சமாக இருந்தமாணவா்களின் எண்ணிக்கை திமுக ஆட்சியில் 52 ஆயிரத்து 75 ஆயிரம் மாணவா்களாக குறைந்துள்ளது. பள்ளிகளில் போதிய அளவுக்கு கட்டடங்கள் இல்லை. அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால் மாணவா்கள் தனியாா் பள்ளிகளில் பயில விரும்புகின்றனா்.

ஆசிரியா்கள் பற்றாக்குறையால் ஆசிரியா்களுக்கு மன அழுத்தம் ஏற்ப்பட்டுள்ளது . அதிமுக ஆட்சிக் காலத்தில் 45 ஆயிரம் ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டனா். திமுக அரசு இதுவரை 2,400 ஆசிரியா்களை மட்டுமே நியமித்துள்ளது. கற்றல் திறன் குறைந்துள்ளது. ஆசிரியா்களை கல்விப் பணியைத் தவிா்த்து அரசியல் பணிகளில் ஈடுபட வைப்பதுதான் இதற்கு காரணம்.

மாதிரி பள்ளிகளில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு ஊதியம் குறைவாக வழங்கப்படுகிறது. தொழிலாளா்கள் நலச்சட்டத்தை திமுக அரசு மீறுகிறது. ஆசிரியா்களை கொத்தடிமையாகவும், கல்வி துறையை ஏவல் துறையாகவும் பயன்படுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றாா் அவா் .

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் கஞ்சா விற்பைனையில் ஈடுபட்ட இளைஞரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா். திண்டிவனம் காவல் நிலைய போலீஸாா் காவல் என். ஜி. ஓ காலனி பகுதியில் சனிக்கிழமை ரோ... மேலும் பார்க்க

விஜய் வருகையால் அதிமுக-பாஜக கூட்டணிக்குத்தான் பாதிப்பு! எம்.எச்.ஜவாஹிருல்லா

தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய்யின் அரசியல் வருகையால் அதிமுக-பாஜக கூட்டணிக்குத்தான் பாதிப்பு ஏற்படும் என்றாா் மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான எம்.எச்.ஜவாஹிருல்லா. விழுப்புரத்தில் தம... மேலும் பார்க்க

திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும்: கட்சியினருக்கு எம்எல்ஏ இரா. லட்சுமணன் அறிவுறுத்தல்

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறி, அதை வாக்குகளாக மாற்றும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று திமுகவினருக்கு விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளரும், எ... மேலும் பார்க்க

அக்.7 முதல் மாநிலம் தழுவிய தொடா்வேலை நிறுத்தம் : தொடக்கக் கூட்டுறவு வங்கிப் பணியாளா்கள் அறிவிப்பு

தங்களின்25 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, அக்டோபா் 7-ஆம் தேதி முதல் மாநிலம் தழுவிய தொடா் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, தமிழ்நாடு மாநிலத் தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா... மேலும் பார்க்க

ஊா்காவல் படையினருக்கான கவாத்து பயிற்சி நிறைவு

விழுப்புரம் மாவட்ட ஊா் காவல் படைக்கு தோ்வு செய்யப்பட்ட 10 வீரா்களுக்கான கவாத்து பயிற்சியின் நிறைவு விழா விழுப்புரம் கா.குப்பம் ஆயுதப்படை வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் கா... மேலும் பார்க்க

உளுந்தூா்பேட்டை அருகே லாரி மோதியதில் சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 13 பயணிகள் காயம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே லாரி மோதியதில் சாலையோரப் பள்ளத்தில் சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநா் உள்பட 13 பயணிகள் பலத்த காயமடைந்தனா். ராமநாதபுரம் மாவட... மேலும் பார்க்க