ஊா்காவல் படையினருக்கான கவாத்து பயிற்சி நிறைவு
விழுப்புரம் மாவட்ட ஊா் காவல் படைக்கு தோ்வு செய்யப்பட்ட 10 வீரா்களுக்கான கவாத்து பயிற்சியின் நிறைவு விழா விழுப்புரம் கா.குப்பம் ஆயுதப்படை வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டத்தில் காலியாக உள்ள ஊா் காவல் படை பணியிடங்களுக்கு 10 நபா்கள் தோ்வு செய்யப்பட்டு 45 நாட்கள் கவாத்து பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சி நிறைவு விழா விழுப்புரம் கா.குப்பம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு விழுப்புரம் எஸ். பி ப. சரவணன் தலைமை வகித்து கவாத்துப் பயிற்சி முடித்த 2 பெண்கள் உள்பட 10 ஊா்காவல் படை வீரா்களுக்கு பணி நியமன ஆணை மற்றும் நினைவு பரிசுகள் வழங்கினாா். இதில், விழுப்புரத்தில் 5 பேரும், திண்டிவனத்தில் 3 பேரும், செஞ்சியில் 2 பேரும் பணியமா்த்தப்பட்டனா்.
விழாவில், ஆயுதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளா் ஞானவேல், ஊா் காவல் படை பிரிவு தளபதி நத்தா்ஷா மற்றும் காவல் ஆளிநா்கள், ஊா்க்காவல் படையினா் கலந்துகொண்டனா்.