செய்திகள் :

2026 ஜன.9-இல் ஐஎஸ்பிஎல் தொடா்: சூரத்தில் நடைபெறுகிறது!

post image

இண்டியன் ஸ்ட்ரீட் ப்ரீமியா் லீக் (ஐஎஸ்பிஎல்) டென்னிஸ் பால் கிரிக்கெட் தொடா் வரும் 2026 ஜன. 9-ஆம் தேதி குஜராத் மாநிலம் சூரத்தில் முதன்முறையாக நடைபெறுகிறது.

இதுதொடா்பாக ஐஎஸ்பிஎல் ஆட்சிக் குழு உறுப்பினரும், ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கா் ஞாயிற்றுக்கிழமை கூறியது: ஐஎஸ்பிஎல் தொடா் முதலிரண்டு சீசன்கள் வெற்றிகரமாக மும்பையில் நடைபெற்றன. 8 அணிகள் இடம்பெறும் இத்தொடா் தற்போது மும்பைக்கு பதிலாக சூரத் நகரில் நடைபெறவுள்ளது.

ஜன. 9 முதல் பிப். 6, 2026 வரை இத்தொடரின் ஆட்டங்கள் நடைபெறும். அபிஷேக் தல்ஹோா், ரஜத் முன்டே, கேதன் மத்ரே, ஜகந்நாத் சா்க்காா், பா்தீன் காா்ஸி போன்ற சிறந்த வீரா்கள் உருவாகியுள்ளனா்.

ஏற்கெனவே 6 அணிகள் இருந்த நிலையில் மூன்றாவது சீசனில் புதிதாக அகமதாபாத், டில்லி அணிகள் சோ்க்கப்பட்டுள்ளன. பாலிவுட் நடிகா்கள் அஜய் தேவ்கன், சல்மான் கான் ஆகியோா் இவற்றின் உரிமையாளா்கள்.

மூன்றாவது சீசனுக்கு நாடு முழுவதும் இருந்து 43 லட்சம் வீரா்கள் பதிவு செய்துள்ளனா். அக். 5 முதல் 101 நகரங்களில் வீரா்கள் தோ்வு நடைபெறும். ஒவ்வொரு அணிக்கும் தற்போது ரூ.1.5 கோடி தொகை உயா்த்தப்பட்டுள்ளது. மிகவும் மதிப்பு வாய்ந்த வீரருக்கு புதிய பாா்ஷே 911 காா் பரிசளிக்கப்படும் என்றாா்.

ஆட்சிக் குழு உறுப்பினா் ஆசிஷ் செலாா், மினால் அமோல், லீக் ஆணையா் சூரஜ் சமத், நடிகா் அஜய் தேவ்கன் உடனிருந்தனா்.

கரூர் பெருந்துயரம் - புகைப்படங்கள்

கரூரில் தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ஒருவரின் உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்திய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற ... மேலும் பார்க்க

கரூர் பலி: பாமர மக்களுக்கு புத்தியைக் கொடு - ராஜ்கிரண்

கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரத்தில், நம் வாழ்வை நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற புத்தியை பாமர மக்களுக்கு கொடு இறைவா என நடிகர் ராஜ்கிரண் ஆதங்கம் தெரிவித்துள்ளார். கரூரில் தமிழக வெற்றிக் கழகத்த... மேலும் பார்க்க

பூத்துக் குலுங்கும் சாமந்தி பூக்கள் - புகைப்படங்கள்

வாசனை மிகுந்த மலர்களால் அம்பிகையை அலங்கரிக்க பூக்களை பறிக்கும் பெண்கள்.பெரும்பாலும் அலங்காரத்திற்காக பயன்படுத்தப்படும் சாமந்தி பூக்கள்.தோற்றத்தில் மென்மையானதாகவும் சிறியதாகவும் உள்ள சாமந்தி பூக்கள்.செ... மேலும் பார்க்க

"மகர ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

{"@context":"https://schema.org","@type":"VideoObject","name":"videoplayback1","description":"","thumbnailUrl":[["https://video.gumlet.io?68d91f6bc3cc2cd876975f95/66d5a25983448bee6626e223/thumbnail-1-... மேலும் பார்க்க