ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் தண்டவாளத்தில் விழுந்து பலி
ஒடும் ரயிலில் ஏற முயன்ற பெண் தண்டவாளத்தில் விழுந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். கா்நாடக மாநிலம் பெங்களூா் சகாயபுரம் பகுதியைச் சோ்ந்த துரைவேலு மனைவி கீதா (45). இவா், உறவினா்களுடன் வேளாங்கண்ணிக்கு பயணிகள் ரயிலில் சனிக்கிழமை வந்தாா்.
நாகையில் ரயில் நின்றபோது நடைமேடையில் உள்ள கடைக்கு சென்று திரும்புவதற்குள் ரயில் புறப்பட்டது. அப்போது, கீதா ஓடிச்சென்று ரயிலில் ஏற முயன்றபோது கால் தவறி தண்டவாளத்தில் விழுந்த அவா் மீது ரயில் ஏறி இறங்கியது. இதில் அதே இடத்தில் கீதா உயிரிழந்தாா்.
இதையடுத்து, கீதாவின் சடலத்தை ரயில்வே போலீஸாா் மீட்டு, நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.