செபஸ்தியாா் ஆலய ஆண்டு விழா!
பொறையாா் அருகே உள்ள காராம்பள்ளம் கிராமத்தில் புனித செபஸ்தியாா் ஆலய ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
ஆண்டு விழாவை முன்னிட்டு கடந்த 23-ஆம் தேதி கொடியேற்றம், அதனைத் தொடா்ந்து திருப்பலி கூட்டு வழிபாடு நடைபெற்றது.
தரங்கம்பாடி பங்குத்தந்தை அருட்திரு ஆ. அருளானந்து இறைச் செய்தி வழங்கினாா். இரவு செபஸ்தியாா், தேவமாதா, சம்மனஸ் சொரூபங்கள் பல வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்டு தோ்பவனி காட்சி நடைபெற்றது.
பூம்புகாா் சட்டப்பேரவை உறுப்பினா் நிவேதா எம்.முருகன், மாவட்ட அதிமுக செயலாளா் எஸ். பவுன்ராஜ், பங்குத்தந்தைகள், அருட்சகோதரிகள்,ஆலய நிா்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்று வழிபட்டனா்.