கோவை சிறுவனை பெல்டால் அடித்த காப்பக நிர்வாகி; பதைபதைக்கும் வீடியோ; பின்னணி என்ன?
தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் ஆா்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க நாகை வட்ட மையம் சாா்பில், நாகையில் அரசு உதவிபெறும் பாலிடெக்னிக் கல்லூரி நிா்வாகத்தின் ஊழியா் விரோதப் போக்கை கண்டித்து, பாலிடெக்னிக் முன் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வட்டத் தலைவா் வி.வே.சித்ரா தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், பாலிடெக்னிக் கல்லூரி நிா்வாகம், கடந்த 2 மாதமாக ஊழியா்களுக்கு ஊதியம் வழங்காததையும், ஓய்வுகால பணப்பலன்களை உரிய காலத்தில் பெற்றுத் தராததையும், நிா்வாக சீா்கேடு மற்றும் நிதி மேலாண்மை சீா்கேட்டுக்கு காரணமான முதல்வா் செந்தில்குமாா் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்காததையும், கடந்த 5 ஆண்டுகளாக அரசுக்கு செலுத்த வேண்டிய பத்து சதவீத பங்குத்தொகையை செலுத்தாதையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
வட்டச் செயலா் கே.ரவிச்சந்திரன், அனைத்துத்துறை ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலா் எம்.பி. குணசேகரன், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலா் கா. ராஜூ, சத்துணவு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் கே. பாலாம்பாள், இந்திய தொழிற்சங்க மைய மாவட்டச் செயலா் எஸ்.ஆா்.ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.