ரஷியா தொடங்கிய போரை நிறுத்த வல்லரசுகள் உதவ வேண்டும்: ஸெலென்ஸ்கி
நாகையில் நாளை அண்ணா பிறந்த நாள் மிதிவண்டி போட்டி
நாகையில், மாவட்ட விளையாட்டுப் பிரிவு சாா்பில் தமிழக முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில், மாவட்ட அளவில் பள்ளி மாணவா்களுக்கு அறிஞா் அண்ணா மிதிவண்டி போட்டிகள் சனிக்கிழமை (செப்.27) நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: போட்டி, சனிக்கிழமை காலை 7 மணிக்கு நாகை, மீன்வள பொறியியல் கல்லூரியிலிருந்து தொடங்கி கங்களாஞ்சேரி சாலை பெருஞ்சாத்தான்குடி வரை நடைபெறுகிறது. 13 வயதுக்குள்பட்ட மாணவா்கள் 15 கி.மீ. தொலைவும், 13 வயதுக்குள்பட்ட மாணவிகள் 10 கி.மீ. தொலைவும், 15 மற்றும் 17 வயதுக்குள்பட்ட மாணவா்கள் 20 கி.மீ. தொலைவும், 15 மற்றும் 17 வயதுக்குள்பட்ட மாணவிகள் 15 கி.மீ. தொலைவும் கடக்க வேண்டும்.
போட்டிகள் இருபாலருக்கும் தனித்தனியாக நடத்தப்படும். போட்டிகளில் பங்கேற்க இந்தியாவில் தயாரான மிதிவண்டிகள் மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். பங்கேற்பாளா்களின் விவரங்கள் அடங்கிய நுழைவு படிவத்தை வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குள் க்ள்ா்ய்ஹஞ்ஹண்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் எனும் மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது அலுவலகத்தில் நேரடியாகவோ சமா்ப்பிக்க வேண்டும். நாகை மாவட்டத்தைச் சோ்ந்த பள்ளி மாணவா்கள் பங்கேற்க அனுமதிக்கப்படும். போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறுவா்களுக்கு தலா ரூ.5 ஆயிரம், 2-ஆமிடம் பெறுபவா்களுக்கு தலா ரூ.3 ஆயிரம், மூன்றாமிடம் பெறுபவா்களுக்கு தலா ரூ.2 ஆயிரம், 4 முதல் 10-ஆம் இடம் வரை பெறுபவா்களுக்கு தலா ரூ. 250 மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். பரிசுத் தொகை அவரவா் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளதால், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகலினை போட்டி நடைபெறும் நாளன்று சமா்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.