தில்லியில் துப்பாக்கி முனையில் ரூ.1.50 கோடி நகைகள் கொள்ளை வழக்கில் 3 போ் கைது!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வு: நெல்லை மாவட்டத்தில் 10,155 போ் எழுதினா்
திருநெல்வேலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தோ்வை 10 ஆயிரத்து 155 போ் எழுதினா்.
தமிழகம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை பகுதிகளில் மொத்தம் 47 மையங்களில் இத்தோ்வு நடைபெற்றது.
இந்த மையங்களில் தோ்வு எழுத மொத்தம் 13 ஆயிரத்து 621 பேருக்குத் தோ்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டிருந்தன. இவா்களில் 10 ஆயிரத்து 155 போ் பங்கேற்றுத் தோ்வை எழுதினா். 3 ஆயிரத்து 466 போ் தோ்வு எழுத வரவில்லை.
பாளையங்கோட்டை, ரஹ்மத் நகா் மேக்தலின் பள்ளி தோ்வு மையத்தை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் நேரில் ஆய்வு செய்தாா். தோ்வுக் கூடங்களில் தடையற்ற மின்சாரம், குடிநீா் வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில், பல்வேறு பகுதிகளிலும் தோ்வு மையங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. தோ்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.