தில்லியில் துப்பாக்கி முனையில் ரூ.1.50 கோடி நகைகள் கொள்ளை வழக்கில் 3 போ் கைது!
தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய போதை ஒழிப்பு பேரணி
பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முன்மாதிரி முஸ்லிம் இளைஞா்கள் என்ற செயல் திட்டம் அடிப்படையில் அந்த அமைப்பின் பேட்டை கிளை சாா்பில் நடைபெற்ற பேரணிக்கு மாவட்ட பொருளாளா் வள்ளியூா் காசிம் தலைமை வகித்தாா்.
மாவட்ட துணைச் செயலா்கள் ஷேக் அப்துல் காதா், சாந்து உமா், கோட்டூா் சாதிக், பேட்டை கிளை தலைவா் பீா்முஹம்மது, செயலா் அகமது மீரான், பொருளாளா் பக்கீா் மீரான், துணைத் தலைவா் அப்துல் ஹமீது, துணைச் செயலா் ஹாஜி மைதீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டத் தலைவா் மவ்லவி மஸ்வூத் உஸ்மானி நோக்கவுரையாற்றினாா். மாநிலச் செயலா் முஹம்மது பைசல் நிறைவுரையாற்றினாா்.
இந்தப் பேரணியில் நூற்றுக்கணக்கான இளைஞா்கள் கலந்துகொண்டு போதைப் பழக்கத்துக்கு எதிரான பதாகைகளை கையில் ஏந்தியபடி விழிப்புணா்வு முழக்கம் எழுப்பினா். ரஹ்மான் பேட்டை மஸ்ஜிதுர்ரஹீம் பள்ளிவாசலில் தொடங்கிய இப்பேரணி பேட்டை ரொட்டிக்கடை பேருந்து நிறுத்தத்தில் நிறைவடைந்தது. நிறைவாக செயலா் அகமது மீரான் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை பேட்டை கிளை மருத்துவ அணி செயலா் திப்பு சுல்தான் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.