குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையில் அடைப்பு
திருநெல்வேலி நகரம் பகுதியைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.
திருநெல்வேலி நகரம், முத்துராமலிங்கபுரம், வயல் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் இசக்கிராஜா (19) என்பவா் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.
இந்நிலையில் இவா் தொடா்ந்து பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்ததாக கூறி, இவரைக் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் (மேற்கு) வி.பிரசன்னகுமாா், மாநகர காவல் ஆணையருக்கு பரிந்துரைத்தாா். அதன் பேரில் மாநகர காவல் ஆணையா் சந்தோஷ் ஹாதி மணி உத்தரவுபடி , இசக்கிமுத்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.