தில்லியில் துப்பாக்கி முனையில் ரூ.1.50 கோடி நகைகள் கொள்ளை வழக்கில் 3 போ் கைது!
கல்லிடைக்குறிச்சியில் மீலாது நபி விழா
திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் சமூக நல்லிணக்க மீலாது நபி விழா, முதுபெரும் ஆலிம் கெளரவிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஜமாத் தலைவா் கே.எஸ். அப்துல் மஜித் தலைமை வகித்தாா். ஜமாத் தலைவா்கள் அ. நாகூா்கனி, எஸ். ரசூல்மைதீன், எஸ்.எம். சாகுல் ஹமீது, எம். அப்துல் காதா், கே. ஒலிமாலிக், என். செய்யது மசூது ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கோடம்பாக்கம் மஸ்ஜிதே ரஹீமா பள்ளிவாசல் தலைமை இமாம் ஏ.எஸ். ஸதக்கத்துல்லாஹ் பாகவீ தொடக்கவுரை ஆற்றினாா். விழாவில், 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆன்மிக பணி செய்து வரும் மூத்த ஆலிம் கே.எம். முஹம்மது மஸ்தானுக்கு, சென்னை கானாத்தூா் அல்ஹிதாயா அரபிக் கல்லூரி முதல்வா் நிறுவனா் எம். சதீதுத்தீன் பாஜில் பாகவீ, ஜமாத் தலைவா் கே.எஸ். அப்துல் மஜித் ஆகியோா் வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கி சிறப்புரையாற்றினா்.
நீடுா் நெய்வாசல் ஜாமிஆ மிஸ்பாஹூல் ஹூதா அரபிக் கல்லூரி துணை முதல்வா் கே.ஏ. முஹ்யீத்தீன் அப்துல் காதா், ஜமாத்துல் உலா சபையின் திருநெல்வேலி மாவட்டத் தலைவா் எஸ்.ஏ. ஷேக்மீரான், கல்லிடைக்குறிச்சி அகஸ்தீஸ்வரா் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி. சங்கரநாராயணன் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.
கல்லிடைக்குறிச்சி நூருல்ஹிதாயா மகளிா் அரபிக் கல்லூரி முதல்வா் மு. ரஹ்மத் ரபீக், ஜமாத்துல் உலமா சபையின் அம்பாசமுத்திரம் வட்டாரத் தலைவா் ஓ.ஏ. முபாரக் அஹ்மது, செயலா் ஏ. மீரான் கனி, பொருளாளா் எம். ஜாஹிா் உசேன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ரஹ்மத் ஜும்மா பள்ளி தலைமை இமாம் எஸ். முகம்மது முஜம்மில் வரவேற்றாா். இமாம் எஸ். முகம்மது யாசீன் நன்றி கூறினாா்.