கரூர் நெரிசல் பலி: பாதிக்கப்பட்டவர்களுடன் இன்று விஜய் சந்திப்பு?
உடல் நலக்குறைவால் பெண் யானை உயிரிழப்பு!
வால்பாறையில் உடல்நலக் குறைவால் பெண் யானை உயிரிழந்தது.
கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த பன்னிமேடு எஸ்டேட் பங்களா டிவிஷன் தேயிலைத் தோட்டம் பகுதியில் யானை சடலம் கிடப்பதாக வனத் துறையினருக்கு கடந்த வெள்ளிக்கிழமை மாலை தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்குச் சென்ற வனத் துறையினா் யானையின் உடலை ஆய்வு செய்தனா்.
இதையடுத்து, ஆனைமலை புலிகள் காப்பக இணை இயக்குநா் சகலா பாபு முன்னிலையில், வனக் கால்நடை மருத்துவா் வெண்ணிலா தலைமையிலான மருத்துவக் குழுவினா் யானையின் உடலை சனிக்கிழமை காலை கூறாய்வு செய்தனா்.
இதில், உயிரிழந்தது சுமாா் இரண்டரை வயதுடைய பெண் யானை என்பதும், உடல்நலக் குறைவால் யானை உயிரிழந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, யானையின் உடலை அதே இடத்தில் வனத் துறையினா் குழித்தோண்டி புதைத்தனா்.