பொறுத்திருந்தால் நல்லதே நடக்கும்: கே.ஏ.செங்கோட்டையன்
அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என வலியுறுத்தி வரும் எம்.எல்.ஏ. கே.ஏ. செங்கோட்டையன், பொறுத்திருந்தால் நல்லதே நடக்கும் எனக் கூறினாா்.
அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமிக்கும், அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையனுக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வரும் நிலையில், அதிமுகவில் இருந்து வெளியேறியவா்களை ஒருங்கிணைக்க வேண்டும் என எடப்பாடி கே. பழனிசாமிக்கு கே.ஏ.செங்கோட்டையன் கடந்த 5-ஆம் தேதி கெடு விதித்தாா்.
இதையடுத்து, கட்சிப் பொறுப்பில் இருந்து கே.ஏ.செங்கோட்டையனை எடப்பாடி கே.பழனிசாமி நீக்கினாா்.
இந்நிலையில், சென்னைக்கு செல்வதற்காக வந்த கே.ஏ.செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறுகையில், அதிமுக ஒன்றிணைவது குறித்து இனி செய்தியாளா்கள்தான் கூற வேண்டும். பொறுத்திருந்தால் நல்லதே நடக்கும் என்றாா்.