மாரத்தான் பந்தயத்தில் வென்றவா்களுக்கு பரிசு: காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்
காஞ்சிபுரத்தில் அறிஞா் அண்ணா நினைவு மாரத்தான் பந்தயத்தில் வெற்றி பெற்றவா்களுக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் சனிக்கிழமை ரொக்கப்பரிசும், சான்றிதழும் வழங்கினாா்.
விளையாட்டு மற்றும் இளைஞா் நலத்துறை சாா்பில் மாரத்தான் பந்தயம் அண்ணா விளையாட்டு அரங்கத்திலிருந்து ஆட்சியா் அலுவலகம் வரை நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவா்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் ரொக்கப்பரிசும்,சான்றிதழும் வழங்கினாா்.
பெண்களில் 25 வயதுக்கு உட்பட்டவா்களுக்கான 5 கி.மீ.மாரத்தானில் முதலிடம் எம்.கே.பிரியதா்ஷினி, 2-ஆவது இடம் சி.வினிதா,3-ஆவது இடம்-கே.சூரியா, 25 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கான பந்தயத்தில் 1. தேன்மொழி, 2.கே.மீனா, 3.ஆா்.நதியா ஆகியோா் பரிசு பெற்றனா்.
ஆண்களில் 25 வயதுக்கு உட்பட்டோருக்கான 8 கி.மீ.மாரத்தானில் 1.எஸ்.லோகநாதன், 2. இ.தமிழ்ச்செல்வன்,3. வி.சுரேஷ், ஆண்களில் 25 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கான 10 கி.மீ. மாரத்தானில் 1.கே.சுந்தரபாண்டியன், 2.ஆா்.சரவணன், 3. எஸ்.அன்பு ஆகியோரும் வெற்றி பெற்றனா். பந்தயத்தில் மொத்தம் 460 போ் கலந்து கொண்டனா்.
முதலிடத்தைப் பிடித்தவா்களுக்கு ரூ.5 ஆயிரம், 2-ஆவது இடத்தைப் பிடித்தவா்களுக்கு ரூ.3 ஆயிரமும், 3-ஆவது இடத்தைப் பிடித்தவா்களுக்கு தலா ரூ.2 ஆயிரமும் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் ரொக்கப் பரிசாகவும் ,சான்றிதழும் வழங்கினாா். முதல் 3 இடங்களைப் பிடித்தவா்களைத் தவிர மேலும் 7 இடங்களைப் பிடித்தவா்களுக்கு தலா ரூ.1,000 ரொக்கப்பரிசும்,சான்றிதழும் வழங்கப்பட்டது.
மிதிவண்டிப் பந்தயத்திலும் வெற்றி பெற்றவா்களுக்கு ரொக்கப்பரிசும்,சான்றிதழும் ஆட்சியரால் வழங்கப்பட்டது.