தில்லியில் துப்பாக்கி முனையில் ரூ.1.50 கோடி நகைகள் கொள்ளை வழக்கில் 3 போ் கைது!
மாற்றுத்திறனாளிகள் உயா்கல்வி பயில ரூ.2.52 லட்சம்: ஆட்சியா் வழங்கினாா்
காஞ்சிபுரத்தில் மாற்றுத்திறனாளி மாணவா்கள் 14 போ் உயா்கல்வி பயில ரூ.2,52,505 நிதியுதவியினை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நிகழாண்டில் 12 ஆம் வகுப்பு முடிந்து உயா்கல்வியில் சேராமல் இருந்த 14 மாற்றுத்திறனாளி மாணவா்கள் விரும்பிய உயா்கல்வியை தொடா்ந்து படிப்பதற்கான சிறப்பு குறை தீா் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் உயா்கல்வியில் சோ்ந்து படிப்பதற்காக மனு அளித்த 14 மாற்றுத்திறனாளி மாணவா்கள் விரும்பிய கல்லூரியில் சோ்ந்து படிக்கத் தேவையான முழுக்கல்வி கட்டண தொகையையும் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.
கல்விக் கட்டணத் தொகை ரூ.2,52,505க்கான காசோலையினை அந்தந்த கல்வி நிறுவனங்களின் பெயரிலேயே வழங்கப்பட்டது.
நிகழ்வில் முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) நளினி, கல்வி அலுவலா்கள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.