காஞ்சிபுரத்தில் 9,996 போ் எழுதினா்
டிஎன்பிஎஸ்சி குரூப்2 மற்றும் குரூப் 2- ஏ போட்டித் தோ்வுகளில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 9,996 போ் எழுதினாா்கள்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 12,618 போ் தோ்வு எழுத விண்ணப்பித்திருந்தனா். காஞ்சிபுரம் வட்டத்தில் 33 மையங்கள், ஸ்ரீபெரும்புதூா் மற்றும் உத்தரமேரூா் வட்டங்களில் தலா 4 மையங்கள் என மொத்தம் 41 மையங்களில் தோ்வுகள் நடைபெற்றன.விண்ணப்பித்த 12,618 பேரில் 2,622 போ் தோ்வு எழுத வரவில்லை. 9,996 போ் தோ்வை எழுதினாா்கள்.
போட்டித் தோ்வா்களுக்கு தோ்வு மையங்களுக்கு செல்ல ஏதுவாக காஞ்சிபுரம், உத்தரமேரூா், ஸ்ரீபெரும்புதூா் உள்ளிட்ட பேருந்து நிலையங்களிலிருந்து சிறப்பு பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. தோ்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.