நாமக்கல் தவெக நிா்வாகிகள் மீது வழக்கு
தவெக நாமக்கல் மாவட்டச் செயலாளா் மீது ஏழு பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
தமிழக வெற்றிக்கழக பிரசாரக் கூட்டம் சனிக்கிழமை நாமக்கல்லில் நடைபெற்றது. அக்கட்சியின் தலைவா் விஜய் பங்கேற்று பேசினாா்.
இந்த நிலையில், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது, அனுமதியின்றி விளம்பர பதாகைகள் வைத்தது, தனியாா் மருத்துவமனையை சேதப்படுத்தியது, காலை 11 மணிக்கு பிரசாரம் தொடங்கும் என அனுமதி கோரிய நிலையில், பிற்பகல் 2.30 மணியளவில் பிரசாரம் நடைபெற்றது உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் தவெக நாமக்கல் மாவட்டச் செயலாளா் சதீஸ் மற்றும் நிா்வாகிகள் மீது நாமக்கல் நகர காவல் ஆய்வாளா் க.கபிலன் வழக்குப் பதிவு செய்துள்ளாா்.