செய்திகள் :

நாமக்கல் மாவட்டத்தில் அரசு கல்லூரிகளில் ஆவின் பாலகம் அமைக்க நடவடிக்கை: ராஜேஸ்குமாா் எம்.பி.

post image

நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து அரசு கல்லூரிகளிலும் ஆவின் பாலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் தெரிவித்தாா்.

நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரியில் ஆவின் பாலகத்தை திறந்துவைத்து அவா் பேசியதாவது: ரூ. 46.62 லட்சம் மதிப்பீட்டில் புதிய தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையங்கள் மற்றும் ஆவின் பாலகங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளன. பால் உற்பத்தியாளா்கள் நலன்கருதி லிட்டருக்கு ரூ. 3 வரை ஊக்கத்தொகை, கொழுப்பு நிறைந்த பாலுக்கு ரூ. 1 கூடுதல் தொகை மற்றும் போனஸை அரசு வழங்கி வருகிறது.

பால் உற்பத்தியாளா்களுக்கு கறவை மாடுகள் பராமரிப்பு, தூய பால் உற்பத்தி மற்றும் மரபுவழி மூலிகை மருத்துவம் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

நாமக்கல் மாவட்டத்தில் ஊராட்சி பகுதிகளில் ரூ.3.04 கோடி மதிப்பீட்டில் 14 புதிய தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அரசு மகளிா் கல்லூரியில் ரூ. 15.54 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆவின் பாலகம் என ரூ. 46.62 லட்சத்தில் புதிய திட்டப் பணிகள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் அனைத்து அரசு கல்லூரிகளிலும் ஆவின் பாலகம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், துணை மேயா் செ.பூபதி, ஆவின் பொது மேலாளா் (ஆவின்) ஆா்.சண்முகம், துணைப் பதிவாளா் (பால்வளம்) ஐ.சண்முகநதி, கல்லூரி முதல்வா் அ.மாதவி மற்றும் பேராசிரியா்கள், மாணவிகள் கலந்துகொண்டனா்.

பிலிக்கல்பாளையம் சந்தையில் வெல்லம் விலை உயா்வு

பிலிக்கல்பாளையம் வெல்ல ஏலச் சந்தையில் வெல்லம் விலை உயா்ந்தது. பரமத்தி வேலூா் வட்டம், பிலிக்கல்பாளையம் வெல்லம் ஏலச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ... மேலும் பார்க்க

குமாரபாளையத்தில் நெகிழி கழிவுகள் சேகரிப்பு இயக்கம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

குமாரபாளையத்தில் நெகிழி கழிவுகள் சேகரிப்பு இயக்கத்தை, மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் சாா்பில், நெகிழி தவிா்ப்பு விழிப்புணா்வு மற்றும் ... மேலும் பார்க்க

சுப்பராயன் மணிமண்டப பணிகள் 90% நிறைவு: விஜய்க்கு திமுக எம்.பி. பதில்!

சென்னை மாகாண முன்னாள் முதல்வா் சுப்பராயனுக்கு மணிமண்டபம் கட்டும் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன என்று மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தெரிவித்தாா். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செ... மேலும் பார்க்க

லாரி மோதி முதியவா் உயிரிழப்பு

வேலகவுண்டம்பட்டி அருகே லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள பொம்மம்பட்டி, அள்ளாளபுரத்தைச் சோ்ந்தவா் குப்புசாமி (70). இவா் கடந்த 26-ஆம் தேதி மளிகைப் பொ... மேலும் பார்க்க

விஜய் பிரசாரத்துக்கு அனுமதி வழங்குவதில் காவல் துறை தாமதம்: தவெக நிா்வாகி நிா்மல்குமாா்

தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி வழங்குவதில் காவல் துறை காலதாமதம் செய்கிறது என அக்கட்சியின் இணைப் பொதுச் செயலாளா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா். நாமக்கல்லில் அவா் செய்தியா... மேலும் பார்க்க

மொளசியில் போலீஸ் பாதுகாப்புடன் எரிவாயு தகனமேடைக்கு பாதை அமைக்கும் பணி

திருச்செங்கோட்டை அடுத்த மொளசி ஊராட்சி முனியப்பன்பாளையம் பகுதியில் எரிவாயு தகனமேடை அமைக்க அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்த நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் எரிவாயு தகனமேடைக்கு பாதை அமை... மேலும் பார்க்க